என்னால் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளருக்கு விண்ணப்பிக்க முடியாது. அதன் காரணம் இதுதான் – சேவாக் ஓபன் டாக்

sehwag
- Advertisement -

இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக ரவி சாஸ்திரி கடந்த சில தினங்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்டார். அவருடைய பதவிக்காலம் 2021 டி20 உலகக்கோப்பை தொடர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Ravi

அதனை தொடர்ந்து இந்திய அணியின் பேட்டிங், பீல்டிங் மற்றும் பௌலிங் ஆகிய துறைகளின் பயிற்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இந்திய அணியின் தேர்வு குழு தலைவரான எம் எஸ் கே பிரசாத் அவர்களை தேர்வு செய்ய உள்ளார். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சேவாக் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் குறித்த தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அதில் அவர் கூறியதாவது : நான் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக விண்ணப்பிக்க மாட்டேன் என்னால் விண்ணப்பிக்க முடியாது என்று கூறியுள்ளார். அதன் காரணத்தையும் அவர் தெரிவித்துள்ளார். அது யாதெனில் : இதற்கு முன்னர் இந்திய அணியின் பயிற்சியாளராக கும்ப்ளே இருந்தபோது என்னை இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொண்டார். கூடவே சில முக்கிய அதிகாரிகளும் என்னை அந்த பதவிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

sehwag

ஆனால் அப்பொழுது எனக்கு இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளராக விருப்பம் இல்லாமல் இருந்தது. அதனால் நான் விண்ணப்பிக்கவில்லை இந்தமுறை நான் இந்திய அணிக்கு பயிற்சி தர தயாராக உள்ளேன் ஆனால் யாரும் என்னிடம் பேட்டிங் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க கேட்கவில்லை.

virender sehwag

அதன் காரணமாக நான் விண்ணப்பிக்க விரும்பவில்லை. இன்னும் ஆண்டுகள் இருக்கிறது இந்திய அணிக்கு என்னுடைய பணியை செய்ய நான் தயாராக உள்ளேன். அதனால் தற்போது நான் எந்த பதவிக்கும் விண்ணப்பிக்காமல் எனது காலம் வரும் வரை நான் காத்து இருப்பேன் என்று சேவாக் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement