எனது கிரிக்கெட் கேரியர் சக்ஸஸ் புல்லாக அமைய இந்த 3 வீரர்களே காரணம் – சேவாக் வெளிப்படை

Sehwag
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் அதிரடி துவக்க வீரரான சேவாக் 1999 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி 2013ஆம் ஆண்டு வரை இந்திய அணிக்காக விளையாடி உள்ளார். 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 8586 ரன்களையும், 251 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 8273 ரன்களையும், 19 டி20 போட்டிகளில் விளையாடி 394 ரன்கள் குவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இவர் எப்படிப்பட்ட அதிரடி துவக்க வீரர் என்பதை நாம் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

Sehwag

இந்திய அணிக்கு கிடைத்த ஒரு மிகச்சிறந்த அதிரடி துவக்க வீரரான இவர் உலகின் பல்வேறு பந்துவீச்சாளர்களையும் தனது அதிரடியான பேட்டிங்கின் மூலம் சிதறடித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இவர் விளையாடும் வேகமான ஆட்டத்திற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். எந்த அணிக்கு எதிராக விளையாடினாலும் தனது பாணியில் அதிரடியில் மிரட்டிய சேவாக் தற்போது தனது கிரிக்கெட் வாழ்வில் இவ்வளவு சக்ஸஸ் ஆக தான் விளையாடியதற்கு மூன்று பேர் காரணம் என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில் : நான் விளையாடிய காலத்தில் குறிப்பாக என்னுடைய ஆரம்பகால கிரிக்கெட்டில் கால் நகர்வுகள் குறித்து பல்வேறு நபர்கள் என்னை விமர்சித்தனர். ஆனால் ஒருவரும் என்னுடைய கால் நகர்வு எப்படி இருக்கவேண்டும் என்று எனக்கு அறிவுரை கொடுத்ததில்லை. ஆனால் என்னுடைய பேட்டிங் குறித்து எனக்கு ஆலோசனை கொடுத்தது மட்டுமின்றி எனது கிரிக்கெட் கேரியரை சக்ஸஸ் புல்லாக மாற்றியதற்கு மூன்று பேர் காரணமாக உள்ளனர்.

மன்சூர் அலிகான் பட்டோடி மற்றும் சுனில் கவாஸ்கர், தமிழக வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் இவர்கள் மூவரும் தான் என்னிடம் புட்வொர்க் குறித்து அதிகம் யோசிக்க வேண்டாம் என்றும் எங்கு நின்று பேட்டிங் செய்கிறோம் என்பது குறித்த தெளிவை ஏற்படுத்தினார்கள். அவர்கள் கொடுத்த சில அறிவுரைகள் தான் எனக்கு பேட்டிங்கின்போது மிகவும் பயன்பட்டது. அதனால் என்னுடைய ஆட்டமும் முன்னேற்றம் கண்டது.

Sehwag

என்னோட கரியரும் சிறப்பாக அமைந்தது. என்னுடைய சிறப்பான ஆட்டத்திற்கு இவர்கள் மூவரே காரணம் என சேவாக் புகழ்ந்துள்ளார். மேலும் தான் கிரிக்கெட் விளையாட ஆசைப்பட்டது 1992ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரை பார்த்த பிறகுதான் என்றும் அப்போது சச்சின் அடித்த ஸ்ட்ரைட் டிரைவ் அவரை மிகவும் கவர்ந்ததாகவும், அவரைப் போலவே நிறைய காப்பி அடித்து கிரிக்கெட் ஷாட்டுகளை விளையாடி உள்ளதாகவும் சேவாக் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement