இந்தியாவிற்காக விளையாட நான் வரட்டுமா ? வீரர்களின் காயம் குறித்து சுவாரசிய பேட்டி அளித்த – சேவாக்

virender sehwag

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணியும், டி20 தொடரில் இந்திய அணியும் வெற்றி பெற்றிருந்தன. இந்நிலையில் முதல் மூன்று போட்டிகள் டெஸ்ட் தொடரில் முடிவடைந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று தொடர் தற்போதுவரை சமநிலையில் இருக்கிறது. கடைசியாக நடைபெற்ற சிட்னி டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது.

INDvsAUS

குறிப்பாக இந்த டெஸ்ட் தொடர் தொடங்கிய முதலே இந்திய வீரர்கள் தொடர்ந்து காயம் அடைந்து வருகின்றனர். தொடங்குவதற்கு முன்னதாகவே இஷாந்த் சர்மா டெஸ்ட் தொடரில் இருந்து விலகினார். முதல் டெஸ்ட் போட்டியில் முகமது சமி காயம்பட்டு அவர் வெளியேறினார். 2வது டெஸ்ட் போட்டி முடிவடைந்தவுடன் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் காயம் காரணமாக வெளியேறினார்..

3வது டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்னதாகவே இந்திய அணியின் அதிரடி வீரர் கே எல் ராகுல் காயத்தின் காரணமாக வெளியேறிவிட்டார் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி கொண்டு இருக்கும் போது இந்திய ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, ஹனுமா விஹாரி மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் முற்றிலுமாக வெளியேறிவிட்டனர்.

jadeja

இதன் காரணமாக 4வது டெஸ்ட் போட்டியில் எஞ்சியுள்ள வீரர்களை மட்டுமே வைத்து விளையாடி விஷப்பரீட்சை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த தொடர் காயத்தின் படலம் இந்திய அணியை பாதித்துவிட்டது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் இதனை கலாய்க்கும் வகையில் ட்விட்டரில் ஒரு பதிவு செய்திருக்கிறார்.

- Advertisement -

Ashwin

அதாவது இந்திய வீரர்கள் அனைவரும் காயத்தால் தொடர்ந்து வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். அடுத்த போட்டிக்கு இந்திய அணியில் விளையாட வேண்டிய 11 வீரர்களை தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டால் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல நான் தயார் எனது ஓய்வில் இருந்து பின்வாங்கி இந்திய அணிக்கு ஆட தயார் என்று நகைச்சுவையாக பேசியிருக்கிறார் விரேந்தர் சேவாக்.