தோனி மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவது கனவு தான். அதற்கு காரணமும் இருக்கிறது – தோனியை சீண்டும் சேவாக்

Sehwag
- Advertisement -

உலககோப்பை அரையிறுதிக்கு தோல்விக்கு பின்னர் தற்போது வரையில் தோனி கிரிக்கெட் ஆடாமல் ஓய்வில் இருக்கிறார். அடுத்து வந்த கிட்டத்தட்ட 4 தொடர்களில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு ஓய்வில் இருந்தார் தோனி. தற்போது 38 வயதாகும் அவரை ஓய்வு பெற்று விடலாம் என முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் ஒருபக்கம் கூறிவருகின்றனர். இருந்தாலும் நான் கிரிக்கெட் ஆடுவேன் என ஐபிஎல் தொடருக்கு தயாரானார் தோனி.

Dhoni

- Advertisement -

இப்படி ஐபிஎல் தொடரில் நன்றாக ஆடி மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிக்கலாம் என்பது தோனியின் எண்ணமாக இருக்கலாம். இந்நிலையில் இது குறித்து பேசிய விரேந்தர் சேவாக் கூறியதாவது :

என்னைப் பொருத்தவரை தோனி இந்திய அணிக்கு திரும்புவது கடினம். அவர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக இருக்கிறார். அவருக்கு ஒரு மாற்று வீரரை தேடும் பணியில் ஏற்கனவே தேர்வுக்குழு களம் இறங்கிவிட்டது. மீண்டும் தோனி மறு பிரவேசம் செய்வது என்பது இயலாத காரியம்.

dhoni

ஒருவேளை மீண்டும் இந்திய அணிக்கு அவர் திரும்பினாலும் யாருக்கு பதிலாக ஆடுவார் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. ஒரு பக்கம் கேஎல் ராகுல் விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் ஆகியவற்றை சிறப்பாக செய்து வருகிறார். மறுபக்கம் ரிஷப் பண்ட் அற்புதமாக ஆட வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகிறார்.

- Advertisement -

இப்படிப் பார்த்தால் தோனி மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிப்பது மிகவும் கடினம் என்றே தோன்றுகிறது இவ்வாறு கூறினார் விரேந்தர் சேவாக். இருப்பினும் சேவாக்கின் இந்த கருத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. ஏனெனில் தோனி வருகைக்காக காத்திருக்கும் அவரது ரசிகர்கள் இந்த விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.

Rishab Pant

ஏற்கனவே இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா தோனியின் வருகை அவரிடமே உள்ளது என்றும் தேர்வுக்குழுவினர் நிச்சயம் டி20 உலகக்கோப்பைக்கான அணியில் அவரை நிச்சயம் தேர்வு செய்வார்கள் என்றும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement