கிரிக்கெட் வாழ்வில் எனது அதிரடிக்கும், முரட்டு அடிக்கும் இதுவே காரணம் – சேவாக் ஓபன் டாக்

sehwag
- Advertisement -

இந்திய அணியின் அதிரடி துவக்க வீரராக இருந்தவர் விரேந்தர் சேவாக். இவர்தான் இந்திய அணிக்காக முதல் முச்சதம் அடித்த வீரர். அதுவும் பாகிஸ்தானுக்கு எதிராக அவர்களது மண்ணில் முல்தான் மைதானத்தில் அந்த முச்சதத்தை அடித்திருந்தார். அதேபோல் இந்திய மண்ணில் சென்னை மைதானத்தில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராகவும் 319 ரன்கள் அடித்து சாதனை படைத்திருந்தார்.

- Advertisement -

இரண்டு முச்சங்கள் அடித்த ஒரே ஒரு இந்திய வீரர் இவர்தான். தற்போது வரை இந்த சாதனை யாராலும் முறியடிக்கப்படவில்லை.தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக சென்னையில் அடித்த அந்த முச்சதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்று கூறியுள்ளார். இதுகுறித்து சமீபத்திய ஸ்டார்ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது…

நான் எப்போதும் அணிக்காகத்தான் ஆடியிருக்கிறேன். தனிப்பட்ட சாதனைகளுக்காக ஆடியதில்லை. என்றுமே அணிக்கு நல்ல துவக்கம் கொடுக்க வேண்டும் என்பதுதான் என் எண்ணம். எனது பேட்டிங் குறித்து நிறைய யோசித்து அதிகம் வளர்த்து உள்ளேன். ஒவ்வொரு முறையும் நான் திட்டம் இடுவேன். எல்லா பந்துகளையும் அடித்து ஆட முடியாது.

Sehwag 1

நான் விட்ட பல பந்துகள் இருக்கிறது. சென்னையில் ஆடிய அந்த ஆட்டத்தின் போது கூட முதல் 4 பந்துகளை தடுத்து ஆடினேன். கடைசி 2 பந்துகளில் தான் பவுண்டரிக்கு விளாசினேன். ஏனெனில் அந்த இரண்டு பந்துகளும் அடிக்க ஏதுவான பந்துகள். நான் ஒரு பந்தினை அடிக்கும் போது அது பவுண்டரி செல்கிறதா இல்லை சிக்சருக்கு செல்கிறதா என்பது பற்றி யோசிக்க மாட்டேன் .பந்தை அடிக்க வேண்டும் அவ்வளவுதான்.

- Advertisement -

நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் அடித்த இரண்டு முச்சதத்தில் எனக்கு இரண்டாவது முச்சதம் மிகவும் மகிழ்ச்சி அளித்தது. சொல்லப்போனால் முல்தானில் அடித்த அந்த முச்சத்தை விட சென்னையில் அடித்த முச்சதம் மிகச்சிறப்பு வாய்ந்தது என்று கூறியுள்ளார் வீரேந்தர் சேவாக். ஏனெனில் வலுவான தென்னாபிரிக்க பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அந்த ஆட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்து.

ஏற்கனவே சேவாக் தனக்கு தடுப்பாட்டத்தில் நம்பிக்கை இல்லை என்றும், அதிரடியாக ஆடுவதே எனது பாணி என்று கூறியிருந்தார். மேலும் அவர் விளையாடிய காலத்தில் அவர் அதிரடியாக விளையாட அவருக்கு கேப்டன்கள் ஒத்துழைத்தாகவும் சேவாக் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement