இந்திய அணியில் இவரை தேர்வு செய்யாதது வருத்தமளிக்கிறது. தொடரும் சர்ச்சை குறித்து – சேவாக் பேட்டி

Sehwag

ரோகித் சர்மா ஆஸ்திரேலிய தொடருக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டது தற்போது பெரும் சர்ச்சையாக மாறிக்கொண்டிருக்கிறது. ஐபிஎல் தொடரின் போது போது காயமடைந்த மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனும், இந்திய ஒருநாள் அணியின் துணை கேப்டனும் ரோகித் சர்மா ஆஸ்திரேலிய தொடருக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

INDvsAUS

நீக்கப்பட்டார் என்பது கூறுவதைவிட, ஐபிஎல் தொடரில் காயமான போது அவரை அப்படியே பரிசோதிக்காமல் அழைத்துச் செல்வது சரியல்ல என்று நினைத்து தேர்வு குழுவினர் அவரது பெயரை தற்போது விடுவித்து இருக்கிறார்கள். ஆனால் முதலில் காயம் எப்போது ஆனது? யார் முதலில் ரோஹித் சர்மாவிற்கு காயம் என்று கூறினார்கள் என்பது குறித்த கேள்விகள் தற்போது எழுந்து கொண்டு இருக்கின்றன.

என்ன மாதிரியான காயம் என்பது குறித்து மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தெரிவிக்கவில்லை. இது குறித்து முன்னர் பேசிய இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி… அவசரப்படாமல் ரோகித் சர்மாவின் காயம் சரியான பின்னர் அவரை இந்திய அணியில் சேர்ப்பது தான் சரியானது. இதனை தான் நாங்கள் தற்போது செய்து வருகிறோம் என்று கூறினார்.

சௌரவ் கங்குலி கூறுகையில்… காயத்திலிருந்து ரோகித் சர்மா மீண்டு விட்டார் என்று நினைக்கிறேன் அவரை கண்டிப்பாக இந்திய அணியில் பார்க்கலாம் என்று கூறியுள்ளார். இதே கருத்தை ரோகித் சர்மாவும் தான் காயத்தில் இருந்து மீண்டு விட்டதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஹைதராபாத் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் கூறினார்

- Advertisement -

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பேசியுள்ள விரேந்தர் சேவாக் கூறுகையில்….ரோகித் சர்மாவின் காயத்தின் நிலை குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு தெரியாமல் இருக்கவே இருக்காது. தேர்வுக்குழுவில் அவர் அங்கம் வகிக்க விட்டாலும், அணியை தேர்வு செய்யும் முன்னர் ரவிசாஸ்திரியிடம் கண்டிப்பாக தேர்வுக்குழுவினர் ஆலோசித்து இருப்பார்கள். அவரது கருத்தை கேட்டிருப்பார்கள்.

rohith

ஐபிஎல் தொடரில் ரோகித் சர்மா ஆடிக் கொண்டிருக்கும்போது இந்திய அணிக்கு மட்டும் அவரை எப்படி வைத்து ஆட முடியாது என்று கூறலாம்? இது மிகத் தவறான நடவடிக்கை எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது என்று கூறியிருக்கிறார் விரேந்தர் சேவாக்.