முடியலனா பெட் ரெஸ்ட் எடுக்க சொல்லங்க. ஏன் மறுபடியும் அவர் விளையாடுறாரு – ரோஹித்தை விளாசிய முன்னாள் வீரர்

Rohith-4
- Advertisement -

பதின்மூன்றாவது ஐபிஎல் தொடர் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. 56 லீக் போட்டிகளில் முடிவடைந்துவிட்டன. இந்த தொடரில் முதலிடத்தை பிடித்து முதல் அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. தற்போது வரை 18 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணி இந்த தொடரின் போது கடைசி நான்கு போட்டியில் ரோகித் சர்மா காயம் காரணமாக விளையாடவில்லை.

rohith 2

- Advertisement -

அவருக்கு பதிலாக கைரன் பொல்லார்ட் அணியை வழிநடத்தினார். இவரது காயத்தை சுட்டிக்காட்டி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இந்திய அணியிலிருந்து ரோகித் சர்மாவின் பெயரை நீக்கி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான அணி அறிவிக்கப்பட்டது. அவரது பெயர் ஒரு அணியில் கூட இடம்பெறவில்லை.

இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்ட உடன் அவர் வலைப்பயிற்சியில் செய்த வீடியோவை மும்பை இந்தியன்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து. அப்படிப் பார்த்தால் ரோகித் சர்மாவிற்கு காயம் என்றால் எப்படி பயிற்சி செய்கிறார் ? அப்படி பயிற்சி செய்தால் அது என்ன மாதிரியான காயம் ஏற்படும் ? என பல கேள்விகள் எழுந்தது.

rohith 1

மேலும் அவரது உடல்நிலை உடல் தகுதி குறித்து தெரிந்துகொள்ள ரசிகர்களுக்கு முழு உரிமை இருக்கிறது என்று பல விமர்சகர்கள் கூறியிருந்தனர். அவரது உடல் தகுதியை கண்காணிக்கப்பட்டு வருவதாக தேர்வு குழுவினரும் கூறியதனால் ரோஹித் சர்மாவின் காயம் குறித்து பேசிய விரேந்திர சேவாக் கூறியதாவது : அவரது காயம் குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

sehwag

இந்த விவகாரத்தில் நாம் தெளிவடைய வேண்டும் என்றால் ஊடகங்கள் கேள்வி எழுப்ப வேண்டும் ரோகித் சர்மா காயம் காரணமாக அவதிப்படுகிறார் என்றால் அவர் விரைவில் குணமடைய ஓய்வெடுக்க வேண்டும். அதனை விட்டுவிட்டு மைதானத்தில் வந்து உட்கார்ந்து கொள்கிறார் என்று ரோகித் சர்மாவை கடுமையாக விமர்சித்திருந்தார். விரேந்திர சேவாக் மேலும் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்தையும் கடுமையாக விமர்சித்திருந்தார் வீரேந்தர் சேவாக்.

Advertisement