கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் நட்சத்திர வீரராக இருந்த ஆஸ்திரேலியாவை சேர்ந்த மேக்ஸ்வெல் இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் வார்த்தையால் தாக்கியுள்ளார். 13வது ஐபிஎல் சீசனில் மும்பை அணி தனது வெற்றியை மீண்டும் நிலைநாட்டியது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த மேக்ஸ்வெல் 10.75ரூ கோடிக்கு ஏலத்தில் எடுத்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி. மேக்ஸ்வெல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் நட்சத்திர வீரர் ஆவார். இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் 13 போட்டிகளில் விளையாடியுள்ள மேக்ஸ்வெல் வெறும் 108 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார். அதில் 9 பவுண்டரிகள் அடித்தும் ஒரு சிக்சர் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நடப்பு ஐபிஎல் தொடரில் மோசமாக விளையாடிய மேக்ஸ்வெல் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரையும் மிரள வைத்தார். தற்போது வரை 3 ஒருநாள் போட்டியில் 166 ரன்கள் குவித்துள்ளார். அதன்பின் 3 டி20 போட்டிகளில் விளையாடிய மேக்ஸ்வெல் 78 ரன்கள் குவித்துள்ளார். அவரது ஆட்டம் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடிய போது முற்றிலும் மாறுபட்டு இருந்தது.
ஐபிஎல் தொடரில் ஒரு சிக்சர் கூட அடிக்காத மேக்ஸ்வெல் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் 5 சிக்சர்கள், ஒருநாள் தொடரில் 11 சிக்சர்கள் அடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் மேக்ஸ்வெல்லின் மோசமான செயல்திறனை கண்டு இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக் கடுமையாக பேசியுள்ளார்.
மேக்ஸ்வெல்லின் மாறுபட்ட செயல்திறனைக் காணும்போது ஐ.பி.எல் டி20 தொடரை அவர் ஒரு பொழுதுபோக்காக கருதி விளையாடுகிறார். ஐபிஎல் தொடரில் மேக்ஸ்வெல் ரன்கள் குவிப்பது தவிர எல்லாவற்றையும் செய்கிறார். சக வீரர்களை ஊக்குவிப்பது மற்றும் நடனமாடுவது போன்றவற்றை செய்கிறார்.
அதுமட்டுமின்றி போட்டி முடிந்தவுடன் குளிர்பானங்களை பெற்று அறைக்கு எடுத்துச் சென்று கும்மாளம் போடுகிறார் என்று விரேந்திர சேவாக் மேக்ஸ்வெல் குறித்து கூறியுள்ளார். இதற்கு முன்னர் ‘விரு கி பைதக்’ கில் என்று மேக்ஸ்வெல்லை வீரேந்தர் சேவாக் கடுமையாக கலாய்த்துள்ளார் என்பது பிடத்தக்கது.