பேட்ஸ்மேன்களுக்கு ஒரு நியாயம். பவுலர்களுக்கு ஒரு நியாயமா ? – அணித்தேர்வை வெளுத்து வாங்கிய சேவாக்

sehwag

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதல் மூன்று போட்டிகளில் சாஹலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. முதலிரண்டு போட்டிகளிலும் 40 ரன்களுக்கு மேலாக அதிக ரன்களை வழங்கிய சாஹல் மூன்றாவது போட்டியிலும் அதே தவறை செய்தார். எனவே எஞ்சிய இரு ஆட்டங்களில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில் நடந்து முடிந்த ஒரு நாள் தொடரில் சஹாலுக்கு வாய்ப்பு வழங்காமல் குல்தீப் யாதவுக்கு எப்படி வாய்ப்பு வழங்கினீர்கள் என்று சேவாக் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து பேசிய சேவாக் : டி20 தொடரில் முதல் நான்கு போட்டிகளில் கேஎல் ராகுல் அடுத்தடுத்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. வழங்கப்பட்ட 4 வாய்ப்புகளிலும் கேஎல் ராகுல் தனது திறமையை நிரூபிக்க தவறினார். இருந்த போதிலும் அவருக்கு ஒருநாள் தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டது. முதல் போட்டியில் ஒரு கட்டத்தில் 205-5 என்கிற நிலையில் இருந்த இந்திய அணியை கே எல் ராகுல் குருணல் பாண்டியா உடன் ஜோடி போட்டு அதிரடியாக ஆடி 317-5 என்கிற ஸ்கோரை எடுக்கச் செய்தார்.

இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய கேஎல் ராகுல் 43 பந்துகளில் 62 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை அடிக்கோடிட்டு பேசியுள்ள சேவாக் ராகுல் முதல் நான்கு டி20 போட்டியில் சொதப்பிய பட்சத்தில் அவர் மீது நம்பிக்கை வைத்து முதல் ஒருநாள் போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. அதே வாய்ப்பை ஏன் சஹாலுக்கு வழங்கவில்லை என்று சேவாக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Bumrah

மேலும் இதேபோல ஜஸ்பிரித் பும்ரா அடுத்தடுத்த போட்டிகளில் சொதப்பும் பட்சத்தில் அவருக்கு வாய்ப்பளிக்காமல் வெளியே உட்கார வைப்பீர்களா ? அல்லது அவர் மீது நம்பிக்கை வைத்து அவருக்கு வாய்ப்பு கொடுப்பீர்களா ? என்கிற கேள்வியையும் எழுப்பி உள்ளார். மேலும் கோலியின் அணித்தேர்வின் மீதும் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

- Advertisement -

rahul

இறுதியாக பேசிய சேவாக் : பேட்ஸ்மேனை எப்படி கருதுகிறார்களோ, அதேபோல் பவுலர்களையும் கருத்தில் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். பேட்ஸ்மேன்கள் சொதப்பும் போது அவர்கள் மீது நம்பிக்கை வைத்து தெடர்ந்து வாய்ப்புகள் வழங்குவது போல, பவுலர்களும் அவ்வப்போது தடுமாறும்போது அவர்களுக்கும் வாய்ப்பு வழங்கி ஆதரிக்குமாறும் தெரிவித்துள்ளார்.