ரஹானேவின் சிறுவயது புகைப்படத்தை பகிர்ந்து “கராத்தே கிட்டுக்கு” வாழ்த்து தெரிவித்த சேவாக் – வைரலாகும் புகைப்படம்

Rahane

இந்திய அணியின் முன்னணி வீரரான அஜிங்கிய ரஹானே கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 20 டி20 போட்டிகள் 90 ஒருநாள் போட்டிகள் மற்றும் 73 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஒருநாள் மற்றும் டி20 ஆகிய அணிகளில் இருந்து ஓரங்கட்டப்பட்டாலும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடுவது மட்டுமின்றி துணை கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார்.

Rahane-4

இவரது தலைமையில் 2020 ஆம் ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று தனது 33வது பிறந்தநாளை கொண்டாடும் ரஹானேவிற்கு சமூக வலைதளம் மூலமாக பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தனக்கே உரித்தான பாணியில் வித்தியாசமான பதிவு ஒன்றினை பதிவிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.

- Advertisement -

அதில் ரஹானேவின் சிறுவயது கராத்தே பயிற்சி புகைப்படத்தை பதிவிட்ட சேவாக் : இந்த கராத்தே கிட்டை நீங்கள் ஆஸ்திரேலிய தொடரில் பார்த்திருப்பீர்கள். 36 ரன்களுக்கு அடிலெய்டு போட்டியில் இந்திய அணி சுருண்ட பிறகு மீண்டும் இவர் இந்திய அணியை வழிநடத்தி வரலாற்று சிறப்புமிக்க ஒரு வெற்றிக்கு அழைத்துச் சென்றுள்ளது அனைத்து ரசிகர்கள் நினைவிலும் இருக்கும் ஹாப்பி பர்த்டே ரஹானே என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

சேவாக்கின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின் போது முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது.

- Advertisement -

அதனைத் தொடர்ந்து தனது குழந்தை பிறப்பிற்காக விராட்கோலி நாடு திரும்பியதால் துணை கேப்டனாக இருந்த ரஹானே இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்று மீதமுள்ள மூன்று போட்டிகளில் அசத்தலாக அணியை வழிநடத்தி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்று தந்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது..

Advertisement