முதல் ஒருநாள் போட்டியின் வெற்றி : விராட் கோலியை சீண்டி சேவாக் நேரடி கருத்து – ஏன் இப்படி பேசிட்டாரு ?

Sehwag
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று கொழும்பு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 262 ரன்களை குவித்தது. அதன்பின்னர் 263 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 36.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடர் தொடங்கும் முன்னர் இந்தியாவிலிருந்து இலங்கை வந்திருக்கும் இந்த அணியானது முதன்மை அணி கிடையாது என்றும் இது இந்தியாவின் பி டீம் என்றும் இந்த இந்திய அணியுடன் இலங்கை அணி விளையாடுவது இலங்கை அணியை அசிங்கப்படுத்தும் செயல் என ரணதுங்கா கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்திய அணியின் இந்த அசத்தலான வெற்றிக்குப் பிறகு இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் கூறுகையில் : ரணதுங்கா மரியாதை தெரியாமல் பேசியிருக்கிறார். நீங்கள் வேண்டுமானால் இந்த இளம் அணியை பி டீம் என கருதலாம். ஆனால் எங்களால் இன்னொரு அணியை கூட இதேபோன்று வலுவாக கட்டமைத்து இலங்கைக்கு அனுப்ப முடியும். அந்த அளவிற்கு தற்போது இந்திய அணி பலமாக உள்ளது.

chahal

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : கோலியையும் தாக்கும் விதத்தில் இப்போது இருக்கும் இந்த அணியை வைத்து இங்கிலாந்தில் இருக்கும் கோலியின் அணியை வீழ்த்த முடியும் என்று தெரிவித்துள்ளார். அவரின் இந்த கருத்து தற்போது இணையத்தில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் விராத் கோலியின் தலைமையிலான அனுபவம் வாய்ந்த அணியை குறைத்து மதிப்பிடுவது போன்றும் சேவாக் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

IND

தவான் தலைமையிலான இந்த அணியை உயர்த்திப் பேசுவதற்காக இந்திய முதன்மை அணியை சற்று தரம் தாழ்த்தி பேசி உள்ளதாகவும் இந்த கருத்து இருக்கிறது. இளம் வீரர்களை புகழ வேண்டுமென கோலியின் அணியை சற்று குறைத்து பேசியுள்ளது விமர்சகர்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement