
அஜின்க்யா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று வரும் 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் 14 ஆட்டங்களில் விளையாடி ஆறு வெற்றி மற்றும் ஏழு தோல்விகளுடன் 13 புள்ளிகளை பெற்று ஏழாம் இடத்தைப் பிடித்து வெளியேறியது. இந்த தொடரின் ஆரம்ப கட்டத்தில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்விகளை சந்தித்த கொல்கத்தா அணி இரண்டாம் பாதியில் மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பியது.
ஒரு கட்டத்தில் பிளே ஆப் சுற்றிற்கான வாய்ப்பு தென்பட்ட வேளையில் இறுதியாக டெல்லி அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த ஆட்டத்தில் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்திய கொல்கத்தா அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து இந்த தொடரை நிறைவு செய்திருக்கிறது. இந்த சரிவு கொல்கத்தா அணியின் ரசிகர்கள் மத்தியிலும், நிர்வாகத்தின் மத்தியிலும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக அடுத்த ஆண்டு கே.கே.ஆர் அணியில் அதிரடி மாற்றங்கள் நிகழலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் அடுத்த ஆண்டு கே.கே.ஆர் அணியில் அஜின்க்யா ரஹானேவை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கி வேறொரு கேப்டனை கொண்டு வர வேண்டும் என இந்திய அணையின் முன்னாள் வீரரான சேவாக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : கொல்கத்தா அணி தற்போதைக்கு வேறு கேப்டனை தேட வேண்டும் அல்லது அணியின் கட்டமைப்பை மாற்றியமைக்க வேண்டும். ஏனெனில் அந்த அணியில் ரஹானே, ரகுவன்ஷி மற்றும் மணிஷ் பாண்டே போன்ற வீரர்கள் குறைந்த ஸ்ட்ரைக் ரேட் கொண்டு விளையாடுகிறார்கள்.
இதையும் படிங்க : ரோஹித் சர்மாவின் பிரமாண்ட ரெக்கார்டை காலி செய்த யாஷஸ்வி ஜெய்ஸ்வால் – விவரம் இதோ
அவர்கள் மூவரையும் ஒரே நேரத்தில் விளையாட அணிக்கு தேர்வு செய்வதால் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. எனவே புதிய கேப்டனை நியமித்து விட்டு ரஹானேவை ஒரு சாதாரணமான வீரராக விளையாட வைக்கலாம் இல்லையென்றால் உங்களுக்கு மிக்க நன்றி இத்துடன் உங்கள் பயணம் நிறைவடைகிறது என்று கூறி அவரை வெளியேற்ற வேண்டும் என சேவாக் கூறியது குறிப்பிடத்தக்கது.