அவங்க ஸ்ட்ரெய்ட்டா சொல்லிட்டாங்க. நீங்க முடிவு எடுக்கவேண்டிய நேரம் இது. தோனிக்கு ஆலோசனை வழங்கிய – சேவாக்

virender sehwag
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான தோனி இங்கிலாந்தில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் இதுவரை இந்திய அணிக்காக விளையாடவில்லை. மேலும் அதற்கடுத்து தோனி விரைவில் ஓய்வு அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் இதுவரை தோனி தனது ஓய்வு குறித்து எந்த ஒரு அறிவிப்பையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.

Dhoni

- Advertisement -

மேலும் கடந்த ஆறு மாதங்களாக அவர் எந்த ஒரு சர்வதேசப் போட்டியிலும் பங்கேற்காததால் பிசிசிஐ நிர்வாகத்தின் ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டார். கடந்த ஆண்டு வரை ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த தோனி இம்முறை ஒப்பந்த பட்டியிலில் இருந்து முற்றிலும் நீக்கப்பட்டார். இந்த நீக்கம் அவரின் கிரிக்கெட் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி உள்ளது என்பது உண்மையே. இந்நிலையில் இந்த ஒப்பந்த பட்டியல் நீக்கம் குறித்து சேவாக் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது :

இந்திய தேர்வு குழுவினரும், பி.சி.சி.ஐ யும் தோனியை இனி தேர்வு செய்யக்கூடாது என்ற விடயத்தில் தெளிவாக உள்ளனர். வீரர்களின் ஒப்பந்த பட்டியலை தேர்வு குழுவினர் தான் உருவாக்குகின்றனர். தேர்வு செய்யப்படாத ஒரு வீரரை ஏன் ஒப்பந்த பட்டியலில் வைத்திருக்க வேண்டும் என்று அவர்கள் எடுத்த முடிவு சரிதான். அதன்படி தோனியை ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கியுள்ளனர். இது அணியிலிருந்து தோனி நீக்க இருப்பதற்கான நேரடியான செய்தி.

dhoni

தோனி இந்த பட்டியலில் இருந்து ஒதுக்கப்பட்டது எந்தவித ஆச்சர்யமும் இல்லை. எனவே சரியான நேரம் பார்த்து அவர் ஓய்வு முடிவை வெளியிட இது சரியாக இருக்கும். உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்குப்பின் அவர் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. ஏற்கனவே டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். எனவே அவர் இனி இந்திய அணியில் இடம்பெறுவது உறுதியற்ற நிலை ஆகிஉள்ளது என்றும் சேவாக் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement