- Advertisement -
இந்திய கிரிக்கெட்

கோலியால் கூட அந்த ஷாட்டை விளையாட முடியல. ஆனா ஷமி அழகா ஆடிட்டாரு – சேவாக் புகழாரம்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2-வது போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. ஒரு கட்டத்தில் இந்திய அணி நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்ததால் மீதமுள்ள விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இறுதி நேரத்தில் ஒன்பதாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஷமி மற்றும் பும்ரா ஆகியோர் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீட்டெடுத்தனர்.

அது மட்டுமின்றி வெற்றிக்கு தேவையான ரன்கள் குவிக்கும் வரை களத்தில் இருந்தனர். இறுதியில் இந்திய அணியானது 2 வது இன்னிங்சில் 298 ரன்கள் எடுத்து டிக்லேர் செய்தது. அதன் பின்னர் இறுதிநாளில் இந்திய அணியில் சிறப்பான பவுலிங்கை வெளிப்படுத்தி 120 ரன்களில் அவர்களை ஆல் அவுட் செய்து 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய அணிக்காக ஒன்பதாவது விக்கெட்டிற்கு 89 ரன்கள் சேர்த்த பும்ரா மற்றும் ஷமி ஆகியோரது ஜோடியை பாராட்டிப் பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான சேவாக் கூறுகையில் :

இந்திய அணி 8 விக்கெட்டுக்களை இழந்து இக்கட்டான நிலையில் இருக்கும்போது இவர்கள் இருவரும் 89 ரன்கள் ஒன்பதாவது விக்கெட்டுக்காக சேர்த்தது சிறப்பான ஒன்று. அதிலும் ஷமி இந்த போட்டியில் அடித்த கவர் டிரைவ் அற்புதமான ஒன்று. கோலியால் கூட இந்த போட்டியில் கவர் ட்ரைவ் விளையாட முடியவில்லை.

இந்த போட்டியில் ஷமி மற்றும் பும்ரா ஜோடியின் பாட்னர்ஷிப் சிறப்பாக இருந்தது. இந்த போட்டியில் ஷமியின் ஷாட்டுக்கள் அனைத்தும் சிறப்பாக இருந்தது. அது மட்டுமின்றி அவர் பேட்டிங்கில் விளையாடிய விதமும் பிரமாதமாக இருந்தது என சேவாக் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by