நாங்க விளையாடுறப்போ சச்சின் அப்போ என்ன பன்னரோ.. அத கோலி இப்போ பண்றாரு – சேவாக் புகழாரம்

Sehwag

இந்தியா இங்கிலாந்துக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நடந்த முதல் போட்டியில் இங்கிலாந்து இந்திய அணியை வீழ்த்தியது. இதனைத்தொடர்ந்து பதிலடி கொடுக்கும் வகையில் இரண்டாவது போட்டியில் விளையாடிய இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விராட் கோலி 73 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காக இருந்தார். தனது முதல் டி20 போட்டியில் களமிறங்கிய கிஷன் கிஷன் அதிரடியாக ஆடி அனைவரது கவனத்தையும் பெற்றார்.

ishan 1

அதேபோல நல்ல பார்மில் இருக்கும் ரிஷப் பண்ட் தனக்கே உரிய குட்டி அதிரடி காண்பித்து விருந்து படைத்தார்.இந்நிலையில் இரண்டாவது போட்டி குறித்து சேவாக் சில விஷயங்களை வெளிப்படையாக பேசியுள்ளார். இதுபற்றி பேசிய சேவாக் : இஷன் கிஷன் மற்றும் ரிஷப் பண்ட் இவர்கள் 2 பேரும் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடக்கூடிய இடது கை ஆட்டக்காரர்கள்.ஆனால் இவர்கள் இருவரும் விராட்கோலி இடமிருந்து ஒரு விஷயத்தை கற்றுக்கொள்ள வேண்டும் அது பொறுமையாக எப்படி தங்களது இன்னிங்சை கடைசிவரை கொண்டு செல்வதே ஆகும்.

இரண்டாவது போட்டியில் குறிப்பாக விராட்கோலி தொடக்கம் முதலே மிக மெதுவாகவே ஆடத் தொடங்கினார். பின்னர் போகப் போக நிதானமாக தேவைப்படும் ஸ்கோரை கவனமாக அதேசமயம் அதிரடியாகவும் விளையாடினார். அதுமட்டுமின்றி இறுதிவரை வரை களத்தில் நின்று போட்டியை வெற்றிகரமாக முடித்தும் கொடுத்தார். இதைத் தான் இவர்கள் இருவரும் கற்றுக்கொள்ளவேண்டும் அவசரப்பட்டு பாதியிலே அவுட்டாகி செல்வது நல்ல பேட்ஸ்மேனுக்கு அழகல்ல.

Ishan-3

எனது காலத்தின் சச்சின் இதை நன்றாக செய்வார் மேட்சை கடைசிவரை எடுத்துச் செல்வார். அதை தற்பொழுது இந்திய அணியில் விராட் கோலி செய்து வருகிறார். இவர்கள் உட்பட அனைத்து வீரர்களும் இந்த விஷயத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என்று சேவாக் கூறி முடித்தார். இதற்கிடையில் நடந்த 3வது போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

pant 2

இந்நிலையில் இங்கிலாந்து அணி டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. நாளை நடக்க இருக்கும் ஆட்டம் டிசைடர் ஆட்டமாக அமையப்போகிறது. இந்தப் போட்டியை வென்றால் மட்டுமே இந்திய அணி தொடரை வெல்லும் வாய்ப்பை நீட்டித்துக் கொள்ள முடியும். எனவே இந்த போட்டியை எதிர்நோக்கி அனைத்து ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.