இந்திய அணியின் சிறந்த கேப்டன் கங்குலியா ? தோனியா ? – சேவாக் கொடுத்த விளக்கம்

Sehwag
- Advertisement -

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய கேப்டன்களாக பார்க்கப்படுபவர்கள் கங்குலி மற்றும் தோனிதான். இவ்விருவருமே இந்திய அணிக்காக பல்வேறு வெற்றிகளை குவித்து தந்துள்ளனர். அதே வேளையில் தோனி ஐசிசி நடத்திய மூன்று வகையான கோப்பைகளையும் பெற்றுத்தந்த கேப்டனாக திகழ்கிறார். அதேவேளையில் கங்குலி இந்திய அணியை சிறப்பாக வழி நடத்திய கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

Ganguly-dhoni

- Advertisement -

இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே இந்திய அணியின் சிறந்த கேப்டன் யார் ? என்ற கேள்வி இந்திய அணியின் முன்னாள் வீரரான விரேந்திர சேவாக்கிடம் எழுப்பப்பட்டது. இதுகுறித்து அவரிடம் கேட்கப்பட்ட கேள்வியில் உங்களைப் பொறுத்தவரை சிறந்த கேப்டன் தோனியா ? அல்லது கங்குலியா ? என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சேவாக் கூறுகையில் : தோனி கேப்டனாக பொறுப்பேற்ற போது இந்திய அணியில் சில நல்ல பேட்ஸ்மேன்கள் மற்றும் சில நல்ல பவுலர்கள் இருந்தனர்.

அதே போன்று அவரும் சில இளம் வீரர்களை அணியில் தேர்ந்தெடுத்து அவர்களை கொண்டு ஒரு நல்ல அணியை உருவாக்கினார். அதனால் அவர் ஒரு நல்ல வெற்றிகரமான கேப்டனாக செயல்பட்டார் என்று குறிப்பிட்டார். அதேபோன்று கங்குலி பேசுகையில் : ஆனால் இந்திய அணியின் கேப்டனாக கங்குலி பொறுப்பேற்ற போது இந்திய அணி அவ்வளவு சரியாக இல்லை.

Ganguly

ஒரு சில வீரர்களை தவிர்த்து மற்ற அனைவரும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடவில்லை. எனவே ஒவ்வொரு வீரரையும் அவர் தேர்ந்தெடுத்து இந்திய அணியை முழுமையாக கட்டமைத்தார். அவரது தலைமையில் தான் இந்திய அணி ஒரு பலம் வாய்ந்த அணியாக மாறியது என்றும் வெளிநாட்டு தொடர்களில் எவ்வாறு விளையாட வேண்டும் ? எவ்வாறு விளையாடினால் வெற்றிகள் கிடைக்கும் என்பதும் ? மேலும் எவ்வாறு செயல்பட்டால் நாம் பலமான அணியாக மாறுவோம் என்பது குறித்தும் கங்குலி தான் வீரர்களுக்கு இடையே ஒரு புரிதலை கொண்டுவந்தார்.

Ganguly

அதுமட்டுமின்றி கங்குலி தான் இந்திய அணியை ஒரு பெரிய அணியாக மாற்றிக்காட்டினார். என்னைப் பொறுத்தவரை தோனியை விட இந்திய அணியை உருவாக்கியவர் கங்குலி தான். அவர்தான் சிறந்த கேப்டன் என்று புகழாரம் சூட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement