ட்விட்டரில் சேவாகிற்கு பதிலடி கொடுத்த இங்கிலாந்து பிரபலம். காரணம் என்ன தெரியுமா ?

virender sehwag

இங்கிலாந்தை சேர்ந்த பியர்ஸ் மோர்கன் என்ற டிவி பிரபலம் ஒருவரின் ட்வீட் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மிகப்பெரிய ஒரு விவாத பொருளாக இருந்தது. அன்று அவர் கூறியது என்னவென்றால், 1.2 பில்லியன் மக்கள்தொகை கொண்ட இந்திய நாடு தோற்று போன இரண்டு மெடல்களைக் கொண்டாடுகிறது. இது எவ்வளவு அவமானகரமானது? என்று அவர் கடந்த 2016 ஆம் ஆண்டு ட்வீட் செய்தார்.

sehwag

அப்போது அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சேவாக் ட்வீட் செய்தார். அதில் அவர் கூறியது என்னவென்றால், நாங்கள் எப்போதும் சின்ன, சின்ன சந்தோஷத்தையும் கொண்டாடுபவர்கள். ஆனால் கிரிக்கெட்டை கண்டுபிடித்த இங்கிலாந்து இதுவரை ஒரு முறை கூட உலக கோப்பையை வெல்லாமல் இன்னும் விளையாடிக் கொண்டு மட்டுமே இருப்பது ஆச்சர்யமாக இல்லையா? என்றார்.

சேவாகின் இந்த வார்த்தையை அப்படியே மனதில் வைத்திருந்த மோர்கன் தற்போது சேவாகின் பழைய டீவீட்டை தேடி கண்டு பிடித்து, அதற்க்கு ஹாய் நண்பா என பதில் கொடுத்துள்ளார்.

- Advertisement -

இந்த ஹாய் நண்பாவிற்கு அர்த்தம், இப்போது பேசு பாக்கலாம் என்பதாக தான் இருக்கவேண்டும் என்று எண்ணிய இந்திய ரசிகர்கள், இங்கிலாந்து பெற்றது வெற்றியே அல்ல. ஐசிசி மற்றும் அம்பயர் தான் இங்கிலாந்தின் வெற்றிக்கு காரணம் என்று கூறி அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.