Athlet மாரி இருக்காங்க.. அதனால ஒன்னும் செத்துட மாட்டாங்க.. சேவாக் கருத்துக்கு ஜோன்ஸ் பதிலடி

sewag jones
- Advertisement -

வரும் செப்டெம்பர் 15ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் துபாய் மற்றும் அபுதாபி ஆகிய நகரங்களில் நடை பெற உள்ளன மொத்தமாக 13 ஒருநாள் போட்டிகள் நடைபெறுகின்றன. ஆசிய கோப்பை போட்டிகள் இந்தியா பாகிஸ்தான் இலங்கை வங்கதேசம் ஆப்கானிஸ்தான் மற்றும் தகுதி சுற்றில் வெற்றி பெரும் ஒரு அணி என 6 சர்வதேச அணிகள் கலந்து கொண்டு விளையாட உள்ளன.இந்த 6 அணிகள் 2 பிரிவாக பிரிந்து அவர்களுக்குள் மோதிக்கொள்வார்கள்.

sehwag

- Advertisement -

முதல் பிரிவில் இலங்கை ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய மூன்று அணிகள் இடம் பிடித்துள்ளன இரெண்டாம் பிரிவில் இந்தியா பாகிஸ்தான் மற்றும் தகுதி சுற்றில் வெல்லும் அணி ஆகிய மூன்று அணிகள் இடம்பிடித்துள்ளன. தற்போது இந்த ஆசிய கோப்பைக்கான காலஅட்டவனை வெளியாகியுள்ளது. இதில் அடுத்தடுத்து நாட்களில் இந்திய அணி இரண்டு போட்டிகளை எதிர்கொள்கிறது. இதனை முன்னாள் இந்திய வீரர் சேவாக் டிவீட்டரில் விமர்சித்துள்ளார்.

இந்திய அணி செப்டம்பர் 18ஆம் தேதி தகுதி சுற்றில் வெற்றி பெற்ற அணியுடன் விளையாடுகிறது அதற்கு அடுத்த நாள் செப்டம்பர் 19ஆம் தேதி பாகிஸ்தானுடன் விளையாடுகிறது இது எப்படி சாத்தியமாகும் பாகிஸ்தானுடன் இந்திய அணியை தோல்வி அடைய வைக்கவே இதுபோன்ற ஷெட்யூல் அமைக்கிறீர்களா இதனை மாற்றுங்கள் என்று காட்டமாக தனது கருத்தினை அவர் பதிவு செய்தார்

jones

இந்த கருத்திற்கு எதிராக ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த முன்னாள் வீரரும் வர்ணனையாளரும் டீன் ஜோன்ஸ் பதிலளித்துள்ளார் அதில் அவர் நாங்கள் எல்லாம் விளையாடும் போது தொடர்ந்து பல போட்டிகளில் அடுத்தடுத்து விளையாடியுள்ளோம் அனால் நாங்கள் இதுபோன்று கூறியதில்லை அதுமட்டுமில்லாமல் இப்போது கிரிக்கெட் விளையாடும் அனைவரும் அத்தலெட் போன்று போன்று நல்ல உடற்தகுதி உடன் உள்ளனர் எனவே அடுத்தடுத்த நாட்களில் விளையாடினாள் ஒன்றும் இறந்து போக மாட்டார்கள் என்று சேவாக் கருத்துக்கு மாற்றாக இந்த பதிலை அளித்துள்ளார்.

Advertisement