ரிஷப் பண்ட் பேட்டிங்கை கெடுக்க ஸ்டீவ் ஸ்மித் செய்த மோசமான செயல் – சேவாக் விளாசல்

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இதுவரை இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேனான மூன்றாவது போட்டி தற்போது சிட்னியில் நடைப்பெற்று முடிந்தது. இந்த மூன்றாவது டெஸ்டில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிஸ்சில் ஸ்மித், புவோஸ்கி மற்றும் லபுஸ்சேன் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தின் காரணமாக 338 ரன்கள் எடுத்துள்ளனர்.

pujara 1

இதில் அதிகபட்சமாக ஸ்மித் 131 ரன்கள் விளாசினார். இதனைத் தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 244 ரன்கள் குவித்தனர். இதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிஸ்சில் 312ரன்கள் குவித்து. அதன்பிறகு 407 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 334 ரன்களை குவித்து டிரா செய்தது.

மூன்றாவது டெஸ்டின் இறுதி நாள் போட்டியில் ரிஷப் பண்ட் மற்றும் புஜாரா சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்தனர். பண்ட்டின் விக்கெட்டை ஆஸ்திரேலிய வீரர்கள் வீழ்த்துவதற்கு கடுமையாக போராடி வந்தனர். அப்போது அனைத்து வீரர்களும் தேனீர் இடைவெளியை முடித்து களத்திற்கு வந்தனர். அப்போது ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் அப்போது ரிஷப் பண்ட்டின் கார்டை தனது காலால் அழித்துவிட்டார்.

Pant

இதன் மூலம் ரிஷப் பண்ட்டை குழப்புவதற்கு முயற்சித்தார் ஸ்டீவ் ஸ்மித். ஆனால் பண்ட் மீண்டும் தனது கார்டை அம்பயரின் உதவி மூலம் எடுத்து விளையாட ஆரம்பித்தார். ஸ்டீவ் ஸ்மித்தின் இந்த கேவலமான சம்பவம் அங்கிருந்த ஸ்டெம்ப் கேமராக்கள் மூலம் பதிவானது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

- Advertisement -

இந்த வீடியோவை பார்த்த அனைவரும் ஸ்மித்தை கேவலமாக விமர்சித்து வருகின்றனர். அதில் சிலர் “இதுபோன்ற கேவலமான செயல்களில் ஈடுபட்டு வெற்றி பெற நினைக்கிறீர்கள். ஸ்மித் இன்னும் திருந்தவே இல்லை” என்றும் பதிவிட்டுள்ளனர்.