இந்த ஐபிஎல் தொடர் துவங்கியதிலிருந்து சென்னை அணிக்கு ஒரு மோசமான ஆண்டாக அமைந்தது வருகிறது. ஏனெனில் முதல் போட்டியில் மும்பை அணியை வீழ்த்திய சென்னை அணி அடுத்து வரிசையாக மூன்று தோல்விகளை அடைந்தது. அதன்பிறகு ஒரு வெற்றி பெற்றாலும் மீண்டும் 2 தோல்வி அடைந்தது. இதனால் 7 போட்டிகளில் இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் ஏழாம் இடத்தை பிடித்திருந்தது.
இந்நிலையில் நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் சென்னை அணி களம் இறங்கி விளையாடியது. இந்நிலையில் சென்னை அணியின் கேப்டன் தோனிக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் அட்வைஸ் ஒன்றை கொடுத்துள்ளார்.
அதில் சேவாக் குறிப்பிட்டதாவது : சிஎஸ்கே அணியில் உள்ள மற்ற வீரர்கள் குறித்து யோசிப்பதை நிறுத்துங்கள். அதை நிறுத்திவிட்டு உங்களை பற்றி யோசியுங்கள் தோனி. சென்னை அணி வெற்றிபெற வேண்டுமாயின் நீங்கள் டாப் ஆர்டரில் இறங்கி விளையாட வேண்டும். அடுத்தவர்களை நம்பி இருக்காமல் நீங்களே அந்த இடத்தில் இறங்க வேண்டும். அது நிச்சயம் உங்களுக்கும் சிஎஸ்கே அளிக்கும் சாதகமாக அமையும் என அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் தோனி விளையாடி ஓராண்டுக்கு மேலாகிறது. மேலும் ஓய்வை அறிவித்த பிறகு அவர் விளையாடவில்லை. எனவே அவரது இழந்த பார்மை மீட்டெடுக்க டாப் ஆர்டரில் இறங்கினால் தான் சரியாக இருக்கும் என கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர் .மேலும் சர்வதேச போட்டியில் இருந்து தோனி ஓய்வு பெற்று விட்டதால் இனி அவருக்கு எந்த கவலையும் இல்லை. எனவே டாப் ஆர்டரில் இறங்கி அதிரடியாக ஆட வேண்டும் என்றும் பலரும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
அது மட்டுமின்றி சர்வதேச கிரிக்கெட்டில் அவர் சாதிக்காத விஷயம் எதுவுமே கிடையாது எனவே இனிவரும் காலங்களில் அவர் எந்த அழுத்தமும் இன்றி சுதந்திரமாக விளையாட வேண்டும் என்றும் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் நடந்த போட்டியில் சென்னை அணி சிறப்பாக விளையாடி 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.