கம்ப்யூட்டருடன் கோலியை ஒப்பிட்டு வித்தியாசமான முறையில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த – சேவாக்

Sehwag
- Advertisement -

இந்திய அணியின் மூன்று வகையான கிரிக்கெட்டுக்கும் தற்போது கேப்டனாக செயல்பட்டு வருபவர் விராட் கோலி. கோலியின் சாதனைகளை நாம் புதிதாக தெரிந்துகொள்ள வேண்டியது கிடையாது. சச்சின் படைத்த அனைத்து சாதனைகளையும் ஒவ்வொன்றாக உடைத்து நாளுக்கு நாள் புதிய சாதனைகளை படைத்து வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் விராட் கோலி தனது 31வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதனால் அவருக்கு தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரான சேவாக் வழக்கமான தனது வித்தியாசமான பாணியில் தனது வாழ்த்துக்களை கோலிக்கு தெரிவித்துள்ளார். இதுகுறித்து சேவாக் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் :

ஒவ்வொரு முறை நீங்கள் பேட்டிங் செய்யும் போதும் F5 பட்டன் போன்று செயல்படுகிறீர்கள் அதாவது ரீஃபிரஷ் செய்வது போன்று புதிதுபுதிதாக மீண்டும் சாதனைகளை செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று வித்தியாசமான முறையில் கணிப்பொறியை கோலியுடன் ஒப்பிட்டு தனது வாழ்த்துக்களை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சேவாக்கின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement