இவர் விளையாடறதா பாத்தா நான் விளையாடற மாதிரியே இருக்கு. கொஞ்சமும் அவருக்கு பயமில்லை – சேவாக் புகழாரம்

Sehwag

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் தொடர் என அனைத்து தொடரையும் இந்திய அணி கைப்பற்றி வரலாறு படைத்தது. இந்த தொடரில் இந்திய அணிக்காக விளையாடிய இளம் வீரர்கள் பலரும் தங்களது சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தனர். அதிலும் குறிப்பாக இந்திய அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மீண்டும் 3 வகையான இந்திய அணியிலும் இடம்பிடித்தார்.

ind

இந்த சிறப்பான ஆட்டத்தால் அனைவரும் அவரை பாராட்டி வரும் வேளையில் ரிஷப் பண்ட் குறித்து சமீபத்தில் பேசிய விரேந்திர சேவாக் , இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த சூப்பர் ஸ்டார் ரிஷப் பண்ட்டு தான் என்று கூறியுள்ளார்.மேலும் அவரைப் பார்க்கையில் ஆரம்ப கால கட்டத்தில் தன்னை பார்ப்பது போல் இருக்கிறது என்றும் புகழ்ந்து கூறியுள்ளார். இது சம்பந்தமாக பேசிய விரேந்திர ஷேவாக் கூறுகையில் :

நான் எனது ஆரம்பகால கிரிக்கெட் கேரியரில் யார் என்ன சொன்னாலும் சரி நான் எனது போக்கில் பேட்டிங் ஆடுவேன். அணிக்கு என்ன தேவை என்பதை புரிந்து கொண்டு அதற்குத் தகுந்தாற்போல் நான் பேட்டிங் செய்து வந்தேன். இப்பொழுது ரிஷப் பண்ட் ஆட்டத்தை பார்க்கையில் , ஆரம்ப காலகட்டத்தில் நான் எப்படி விளையாட வேண்டும் அதேபோல் ரிஷப் பண்ட் விளையாடு வருவதை காணமுடிகிறது. ரிஷப் பண்டும் யார் கூறி கொள்வதையும் பெரிதாக கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், அவர் தன் போக்கில் தனது பேட்டிங்கை செய்து வருகிறார்.

pant 1

ணிக்கு என்ன தேவை என்பதை நன்கு புரிந்து வைத்துக் கொண்டு அதற்கு தகுந்தார்போல் அதிரடியாக விளையாடி வருகிறார். டெஸ்ட் மட்டும் டி20 தொடரில் நன்றாக விளையாடி வந்த பண்டுக்கு ஒருநாள் தொடரில் ஆட வாய்ப்பு கிடைத்தது. தனக்கு கிடைத்த இரு வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டு , இரண்டு போட்டிகளிலுமே இரண்டு அதிரடியான அரை சதங்கள் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக ரிஷப் பண்ட் திகழ்ந்தார்.

- Advertisement -

pant 1

என்னைப் பொறுத்தவரையில் ரிஷப் பண்ட் ஆட்டத்தை பார்க்கையில் , இந்திய கிரிக்கெட் அணியின் வருங்கால சூப்பர் ஸ்டார் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் தான். இனிவரும் காலங்களில் அவர் மிகப்பெரிய சாதனைகளையும் வெற்றிகளையும் இந்திய அணிக்கு பெற்றுத் தருவார் என்று விரேந்திர சேவாக் கூறி முடித்தார்.