இன்னும் சில போட்டிகளில் மட்டும் தான் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். யூஸ் பண்ணிக்கோங்க – சேவாக் அட்வைஸ்

sehwag

ரிஷப் பண்ட் நடந்துமுடிந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக ஆடி அனைவரையும் அசத்தினார். அதே போன்று நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் விக்கெட்டுகள் ஒருபக்கம் போய்க்கொண்டிருக்க நம்பர் 4 பேட்ஸ்மேன் ஆக வந்து நின்று நிதானமாக ஆடி திரும்பவும் நற்பெயரை வாங்கி கொண்டார். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான விரேந்திர ஷேவாக் ரிஷப் பண்ட் பற்றி சில விஷயங்களை அண்மையில் பேசியிருக்கிறார்.

eng

நடந்த முடிந்த முதல் டி20 போட்டியில் கேஎல் ராகுல், விராட் கோலி, ஷிகர் தவான் ஆகியோர் வரிசையாக பெவிலியனை நோக்கி செல்ல இந்திய அணி 3 விக்கெட்டுகளை எடுத்து தடுமாறிக் கொண்டிருந்தது. பின்னர் ஸ்ரேயாஸ் உடன் ஜோடி சேர்ந்து ரிஷப் பண்ட் பார்ட்னர்ஷிப் அமைத்தார்.
23 பந்துகளில் பிடித்து 21 ரன்களை அடித்து அவுட் ஆனார். அவர் இருக்கும் ஃபார்மிற்கு இந்த ரன்கள் குறைவு தான்.

டெஸ்ட் போட்டியில் ஆண்டர்சன் பந்தில் ரிவர்ஸ் ஸ்வீப் பில் அதிரடியாக அது ஆடியது அதேபோல டி20 போட்டியிலும் ஆர்ச்சர் வீசிய பந்தில் ரிவர்ஸ் ஸ்வீப் பில் சிக்சர் அடித்து தனது அதிரடி திறமையை வெளிப்படுத்தினார். ஒருபக்கம் இப்படி அதிரடியாக ஆடினாலும் , நிதானமும் பொறுமையும் மிகவும் முக்கியம்.அதிரடியாக ஆடும் அதைவிட மேட்சை இறுதி வரை கொண்டு சென்று வெற்றி பெற வைப்பது மிக மிக முக்கியம்.

pant 1

தற்போது உள்ள இந்திய அணி மூன்று முதல் நான்கு போட்டிகள் கொண்ட இடைவெளியில், குறைந்தபட்சம் ஒரு போட்டியிலாவது மேட்ச் வின்னிங் பேர்பார்மன்சை எதிர்பார்க்கிறது. அப்படி ஆட தவறினால் வேறு வீரருக்கு அந்த வாய்ப்பை கொடுத்துவிடும். அப்போது உள்ள காலகட்டம் வேறு இப்போது உள்ள காலகட்டம் வேறு பல வீரர்கள் வாய்ப்புக்காக காத்துக் கொண்டு இருக்கின்றனர்.

- Advertisement -

archer 1

அப்படி இருக்க முடிந்த வரை சற்று நிதானமாக பொறுமையாக மேட்ச் வின்னிங் பேர்பார்மன்ஸ்களை கொடுப்பதே மிக முக்கியமாகும். எனவே முடிந்தவரை அதிரடியை குறைத்துக்கொண்டு தேவைப்படும் நேரங்களில் மட்டும் அதிரடியை காட்டி மற்ற நேரங்களில் லூஸ் சாட்டுக்கள் ஆடாமல் நிதானமாக ஆடி இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று மறைமுக தொனியில் விரேந்திர சேவாக் ரிஷப் பண்டிற்கு அறிவுரை வழங்கியுள்ளார்.