ஆசிய கோப்பையிலேயே பாத்தேன், அவருக்கு பிரைட்டான வருங்காலம் இருக்கு – இந்திய வீரரை மனதார பாராட்டும் வாசிம் அக்ரம்

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் 2007க்குப்பின் 2வது சாம்பியன் பட்டத்தை வெல்லும் லட்சியத்துடன் களமிறங்கியுள்ள இந்தியா தன்னுடைய முதல் 4 போட்டிகளில் 3 வெற்றிகளை பதிவு செய்து செமி ஃபைனல் வாய்ப்பை உறுதி செய்துள்ளது. முன்னதாக இந்த தொடரின் கடைசி நேரத்தில் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்பிரித் பும்ரா காயத்தால் வெளியேறியதால் இந்தியா பெரிய பின்னடைவை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்ட முகமது ஷமி, புவனேஸ்வர் குமார் மற்றும் அர்ஷிதீப் சிங் ஆகியோர் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் கட்டுகோப்பாக செயல்பட்டு வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்கள்.

Arshdeep Singh 1

- Advertisement -

அதிலும் குறிப்பாக இடது கை வேகப்பந்து வீச்சாளராக அசத்தும் அர்ஷிதீப் சிங் முகமது ஷமி மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகிய சீனியர்களையும் இந்த உலக கோப்பையில் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் அதிக விக்கெட்களை எடுத்த இந்திய பந்து வீச்சாளராக (9) சாதனை படைத்துள்ளார். கடந்த 2019இல் ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி ஒவ்வொரு வருடமும் தன்னைத்தானே மெருகேற்றிக் கொண்டு சிறப்பாக செயல்பட்ட அவர் இந்த வருடம் உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்தி டெத் ஓவர்களில் குறைவான ரன்களை கொடுத்ததால் இந்தியாவுக்காக அறிமுகமானார்.

ஒளிமயமான எதிர்காலம்:
அதில் வேகத்தை விட விவேகத்தை பயன்படுத்தி நல்ல லைன், லென்த் போன்றவற்றை பின்பற்றி பந்து வீசிய அவர் குறை சொல்ல முடியாத அளவுக்கு பெரும்பாலான போட்டிகளில் அசத்தினார். இருப்பினும் சமீபத்திய ஆசிய கோப்பையிலும் தென்னாபிரிக்க டி20 தொடரிலும் ரன்களை வழங்கி விமர்சனத்திற்கு உள்ளான அவர் இடது கை வேகப்பந்து வீச்சாளர் என்பதால் இந்த உலகக் கோப்பையில் தேர்வு செய்யப்பட்டார். அந்த வாய்ப்பில் பவர் பிளே ஓவர்களில் ஸ்விங் செய்து செய்து பாபர் அசாம், டீ காக் போன்ற தரமான வீரர்களை சொற்ப ரன்களில் காலி செய்த அவர் வங்கதேசத்துக்கு எதிரான வென்றாக வேண்டிய போட்டியில் கடைசி 3 ஓவரில் 2 விக்கெட்டுகளை எடுத்து டெத் ஓவர்களிலும் மிரட்டினார்.

Arshdeep-Singh

அதிலும் குறிப்பாக கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்டபோது 14 ரன்கள் மட்டுமே கொடுத்த அவர் 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற வைத்தார். அந்த வகையில் ஜாகீர் கானுக்கு பின் சிறந்த இடது கை வேகப்பந்து வீச்சாளராகவும் வாசிம் அக்ரம் போல் பவுலிங் ஆக்சனையும் கொண்டுள்ள இவர் வருங்காலத்தில் பெரிய அளவில் வருவார் என்று நிறைய பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் ஆசிய கோப்பையிலலேயே அர்ஷிதீப் சிங் திறமையை பார்த்ததாக தெரிவிக்கும் பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம் அவருக்கு ஒளிமயமான எதிர்காலம் காத்திருப்பதாக பாராட்டியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி பிரபல பாகிஸ்தான் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்த தொடரில் இதுவரை அதுவும் சூப்பர் 12 சுற்றில் அவர் 9 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். வக்கார் யூனிஸ் மற்றும் நானும் அவரது திறமையை ஆசிய கோப்பையிலேயே பார்த்தோம். அவரால் இரு புறங்களிலும் ஸ்விங் செய்ய முடிகிறது. ஆக்கபூர்வமாக யார்கர் மற்றும் மெதுவான பந்துகளை வீசும் அவருக்கு நிச்சயமாக ஒளிமயமான எதிர்காலம் உள்ளது. அதிலும் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் அவர் எடுத்த 2 விக்கெட் தான் போட்டியை மாற்றியது” என்று கூறினார்.

Wasim-Akram

வரலாற்றின் மிகச் சிறந்த இடது கை ஸ்விங் பந்து வீச்சாளராக போற்றப்படும் வாசிம் அக்ரமே இப்படி பாராட்டியுள்ளது அர்ஷிதீப் சிங் தரமான பவுலர் என்பதை தெளிவாக காட்டுகிறது. முன்னதாக ஆசிய கோப்பையில் கேட்ச் விட்டதற்காக கடுமையான விமர்சனங்களை சந்தித்தும் அர்ஷ்தீப் இவ்வளவு அபாரமாக செயல்படுவது பாராட்டுக்குரியது என்று மற்றொரு முன்னாள் வீரர் சோயப் மாலிக் பாராட்டினார். இது பற்றி அதே நிகழ்ச்சியில் அவர் பேசியதற்கு வருமாறு.

“ஆசிய கோப்பையில் கேட்ச் விட்ட பின்பும் அவர் தன்னுடைய நம்பிக்கையை இழக்கவில்லை. அதற்காக இந்தியாவில் அவர் கடுமையாக கிண்டலடிக்கப்பட்டார். ஆனால் நான் அதற்காக கவலைப்படவில்லை என்னுடைய அணுகுமுறை எப்போதும் மாறாது என்ற வகையில் அவர் தற்போது செயல்பட்டு வருகிறார். இதற்கான பாராட்டுக்கள் இந்திய அணி நிர்வாகம் மற்றும் கேப்டனை சேரும். ஏனெனில் கேட்ச் விட்டாலும் அவர்கள் சிறந்த வீரரை இழக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர்” என்று கூறினார்.

Advertisement