அங்க உனக்கு வாய்ப்பு தரமாட்டாங்க. நீ இங்க வந்து நியூசிலாந்து அணிக்காக விளையாடு – இந்திய வீரருக்கு அழைப்பு விடுத்த ஸ்டைரிஸ்

Styris

நேற்று முன்தினம் அபுதாபியில் நடைபெற்ற லீக் போட்டியில் ஆர்சிபி அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வீழ்த்தி பிளேஆப் சுற்றின் வாய்ப்பை உறுதி பெற்றது. அந்த ஆட்டத்தில் முக்கியமான கட்டத்தில் 100 ரன்களுக்கு மும்பை அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் போது தனி ஒரு நபராக சூர்யகுமார் யாதவ் ஒரு பக்கம் நின்று 43 பந்துகளில் 79 ரன்கள் சேர்த்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார்.

ishan kishan 1

அவரின் ஆட்டம் ஒவ்வொரு தொடரிலும் மெருகேறிக் கொண்டே வருகிறது. மேலும் உள்ளூர் தொடர்களிலும் சிறப்பான சாதனைகளை வைத்துள்ளார். ஆனாலும் அவரது திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை. தொடர்ந்து சிறப்பாக விளையாடினாலும் இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.

ஒரு சர்வதேச வீரருக்கு உண்டான தகுதி அனைத்தும் இருந்தும் அவருக்கு அணியில் இடம் கிடைக்காதது பற்றி நிறைய விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. பிசிசிஐ தேர்வு குழு குறித்து சிலர் நேரடியாக விமர்சித்து வருகின்றனர். 2018 ஆம் ஆண்டு 19 ஆம் ஆண்டு என கிட்டத்தட்ட ஆயிரம் ரன்கள் ஐபிஎல் தொடரில் அவர் அடித்துள்ளார்.

SKY

மேலும் இந்த தொடரிலும் அதிரடியாக ரன்கள் அடித்து தனது சிறப்பான தொடர்ந்து வருகிறார். ஆனாலும் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் அவருக்கு இடம் மறுக்கப்பட்டது. அவருக்கு ஆதரவாக ஏற்கனவே ரவி சாஸ்திரி, சச்சின், சேவாக் ஆறுதல் தெரிவித்து அவரை பாராட்டி இருந்தனர். இந்நிலையில் நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான ஸ்காட்ஸ் டைரீஸ் சூர்யகுமார் யாதவ் வெளி நாட்டு அணிக்கு விளையாட விருப்பப்பட்டால் நியூசிலாந்து வந்து இங்கு விளையாடலாம் என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கருத்தில் சூரியகுமார் யாதவின் திறமையை பார்த்து வியக்கிறேன். அவர் வெளி நாட்டு அணிக்கு விளையாட விரும்பினால் நியூசிலாந்து அணிக்காக இங்கு வந்து விளையாடலாம் என தனது கருத்தை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.