இந்த ஒரு விஷயம் நடந்தாலே போதும். ரோஹித் சர்மா கதை முடிஞ்சிடும் – ஸ்காட் ஸ்டைரிஸ் பேட்டி

Styris
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே வருகிற 18-ஆம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதிப் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஜோடி விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இறுதிப் போட்டியில் ரோகித் சர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று பலர் கூறி வரும் நிலையில் ரோகித் சர்மா இந்த இறுதி போட்டியில் தடுமாற்றத்தை சந்திப்பார் என நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்டைரிஸ் தெரிவித்துள்ளார்.

INDvsNZ

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில் : மைதானத்தின் தன்மையை கணக்கில் கொள்ளும்போது நிச்சயம் இந்த இறுதி போட்டியில் பந்து அதிக அளவு ஸ்விங் ஆகும் என்று தெரிகிறது. அப்படி ஸ்விங்காகி வரும் பந்துகளில் நிச்சயமாக ரோகித் சர்மா தடுமாற்றத்தை சந்திப்பார் இதன் மூலம் அவரது விக்கெட் எளிதில் விழவும் வாய்ப்பு உள்ளது. ரோகித் சர்மா துவக்க ஓவர்களில் பெரியதாக கால் நகர்வு இல்லாமல் விளையாடக் கூடியவர்.

எனவே அவர் நியூஸிலாந்துக்கு எதிராக தடுமாற அதிக வாய்ப்பு உள்ளது. போல்ட் மற்றும் சவுதி, ஜேமிசன் ஆகியோரது பந்துவீச்சு நிச்சயம் இந்த மைதானத்தில் இந்திய வீரர்களுக்கு சவால் அளிக்கும் வகையில் இருக்கும். அதேபோன்று புது பந்தில் கிட்டத்தட்ட 28 ஓவர்கள் வரை வேகப்பந்து வீச்சாளர்களை வீசுவார்கள் என்பதால் இந்த போட்டியின் துவக்க இன்னிங்ஸ் மிகவும் முக்கியமான ஒன்று.

போட்டியின் இடையில் விராட் கோலியை வீழ்த்தும் திறமை நீல் வாக்னர் இடம் உண்டு என்று ஸ்டைரிஸ் கூறினார். ஏற்கனவே இந்த மைதானத்தை வடிவமைக்க உள்ள மைதான பராமரிப்பாளர் சைமன் லீ கூறுகையில் : போட்டிக்கான மைதானம் வேகப்பந்து வீச்சு மற்றும் ஸ்விங்கிற்கு ஒத்துழைக்கும் வகையில் அமைக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.

rohith 1

இதுவரை வெளிநாட்டு மைதானங்களில் பெரியதாக டெஸ்ட் போட்டிகளில் சாதிக்காத ரோஹித் தனது அயல்நாட்டு ரெக்கார்டை சரியாக்கும் வகையில் இந்த போட்டியில் விளையாட நினைப்பார். அதுமட்டுமின்றி ஆஸ்திரேலிய தொடரின் போது டீசண்டான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் இந்த இங்கிலாந்து தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement