இந்த ஐ.பி.எல் தொடரில் வெற்றிபெறும் டீம் மற்றும் கடைசி இடம் பிடிக்கும் அணி இதுதான் – ஸ்டைரிஸ் கணிப்பு

Styris
- Advertisement -

14வது ஐபிஎல் லீக் தொடர் வருகிற ஏப்ரல் 9ம் தேதி தொடங்கப்பட்ட மே 30ம் தேதி வரை நடக்க இருக்கிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை சென்னையில் வைத்து சந்திக்க உள்ளது. ஒவ்வொரு அணிகளும் தீவிரமாக தயாராகி வந்து கொண்டிருக்கின்றன. 2019ஆம் ஆண்டு மற்றும் 2020 ஆம் ஆண்டு என அடுத்தடுத்து கோப்பையை கைப்பற்றிய மும்பை இந்தியன்ஸ் அணி இந்த ஆண்டும் தொடர்ந்து மூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்ற தீவிரமான பயிற்சி மேற்கொண்டு வருகிறது.

- Advertisement -

அதேபோல தங்கள் முதல் கோப்பையை கைப்பற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி கேப்பிடல் மற்றும் பஞ்சாப் அணிகள் தொடர்ந்து தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
மறுபக்கம் சென்ற ஆண்டு சரியாக விளையாட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு சிறப்பாக ஆடி கோப்பையை கைப்பற்றும் வண்ணத்தில் தங்களது பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.

அதேபோல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளும் தீவிரவாதி பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நியூசிலாந்தைச் சேர்ந்த மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரும் ஆன ஸ்காட் ஸ்டைரிஸ் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணிகள் எந்தெந்த இடங்களை பிடிக்கும் என்பது குறித்த கருத்துக் கணிப்பை கூறியுள்ளார்.

நியூசிலாந்து வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் கணிப்பு

- Advertisement -

மும்பை இந்தியன்ஸ்
டெல்லி கேப்பிடல்
கிங்ஸ் பஞ்சாப் கிங்ஸ்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
ராஜஸ்தான் ராயல்ஸ்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
சென்னை சூப்பர் கிங்ஸ்

mi

அவர் கூறியுள்ள பட்டியலில் முதலிடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளது. நிச்சயம் இந்த வருடமும் மும்பை இந்தியன்ஸ் அணி தான் கோப்பையை கைப்பற்ற போகிறது என்று கூறியுள்ளார். இரண்டாவது இடத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி உள்ளது. சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி ரன்னர் அப் அணியாக வரும் என்று கூறியுள்ளார்.2014 ஆம் ஆண்டு முதல் சுற்றுக்கு தகுதி பெறாத பஞ்சாப் அணி இந்த ஆண்டு பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று 3-வது இடத்தில் தனது தொடரை முடிக்கும் என்றும் 4வது இடத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தொடரை முடித்துக் கொள்ளும் என்றும் கூறியுள்ளார்.

ஐந்தாவது மற்றும் ஆறாவது இடங்களில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை தேர்ந்தெடுத்துள்ளார். ஏழாவது இடத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை தேர்ந்தெடுத்துள்ள ஸ்காட் ஸ்டைரிஸ் கடைசி இடமான எட்டாவது இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தேர்ந்தெடுத்துள்ளார். கடைசி இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தேர்ந்தெடுத்தது தவறான முடிவு என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவரை விமர்சித்து தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement