முதல்ல ஆர்சிபி சட்டையை கழற்றுங்க.. ஏபி டீ வில்லியர்ஸ்’க்கு.. ஸ்காட் ஸ்டைரிஸ் விட்ட சிஎஸ்கே சவால்

Scott Styris
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதல் 7 போட்டிகளில் 6 தோல்விகளை பதிவு செய்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் திண்டாடுகிறது. முன்னதாக இந்த வருடம் மகளிர் ஆர்சிபி அணி முதல் முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது. அதனால் இம்முறை ஆடவர் அணியும் கோப்பையை வெல்லும் என்று ஆர்சிபி ரசிகர்கள் எதிரணி ரசிகர்களுக்கு சவால் விட்டனர்.

அத்துடன் மகளிர் ஆர்சிபி அணி கோப்பையை வென்றது போல ஆடவர் அணியும் சாதிக்கும் என்று முன்னாள் வீரர் ஏபி டீ வில்லியர்ஸ் தெரிவித்திருந்தார். அந்த நிலையில் சேப்பாக்கத்தில் நடைபெற்ற சென்னைக்கு எதிரான முதல் போட்டியிலேயே பெங்களூரு பரிதாபமாக தோற்றது. அதே போல பஞ்சாப்புக்கு எதிரான 2வது போட்டியிலும் பெங்களூரு தோற்கும் என்று ஸ்காட் ஸ்டைரிஸ் ஜியோ சினிமா வர்ணனையாளர் அறையில் ஏபி டீ வில்லியர்ஸிடம் சவால் விட்டார்.

- Advertisement -

சிஎஸ்கே சவால்:
மேலும் பெங்களூரு தோற்றால் சிஎஸ்கே ஜெர்சியை நீங்கள் அணிய வேண்டும் என்று அவரிடம் ஸ்டைரிஸ் சவால் விட்டார். ஒருவேளை ஆர்சிபி வென்றால் அந்த அணியின் ஜெர்சியை தாம் அணிவதாகவும் ஸ்டைரிஸ் ஒப்புக்கொண்டார். கடைசியில் பஞ்சாப்பை வீழ்த்தி பெங்களூரு வெற்றி கண்டது. அதனால் சவாலில் வென்ற ஏபி டீ வில்லியர்ஸ் சிஎஸ்கே ஜெர்சியை அணியவில்லை.

ஆனால் தோல்வியை சந்தித்த ஸ்காட் ஸ்டைரிஸ் அப்போதிலிருந்து ஆர்சிபி ஜெர்ஸியை அணிந்து வருகிறார். ஆச்சரியப்படும் வகையில் அப்போதிலிருந்தே பெங்களூரு அணி வரிசையாக 5 போட்டிகளில் தோற்றது. அதனால் கடுப்பான ஏபி டீ வில்லியர்ஸ். “ப்ளீஸ் முதலில் இந்த (ஆர்சிபி) சட்டை அணிவதை உடனடியாக நிறுத்துங்கள்” என்று ஸ்காட் ஸ்டைரிஸ்க்கு இன்ஸ்டாகிராமில் பதிலளித்தார்.

- Advertisement -

குறிப்பாக ஸ்காட் ஸ்டைரிஸ் பெங்களூரு அணியின் ஜெர்சியை அணிவதாலேயே ஆர்சிபி தொடர் தோல்விகளை சந்தித்து வருவதால் அதை நிறுத்துங்கள் என்று ஏபி டீ வில்லியர்ஸ் கமெண்ட் பதிவிட்டிருந்தார். அதற்கு தற்போது ஸ்காட் ஸ்டைரிஸ் ஜியோ சினிமா புதிய சவாலை விட்டு பேசியது பின்வருமாறு. “இந்த சட்டையை அணிந்துள்ளது ஒரு கெட்ட சகுனமாகி விட்டது. தற்போது ஆர்சிபி அணிக்கு நான் ஒரு மோசமான சின்னம்”

இதையும் படிங்க: 712 ரன்ஸ் அடிச்ச ஜெய்ஸ்வால் தடுமாற இதான் காரணம்.. அவரிடம் ரோஹித் பேசணும்.. ஆகாஷ் சோப்ரா கோரிக்கை

“ஆனால் அப்படி இருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இருப்பினும் அந்த சட்டை அணிவதை நிறுத்த வேண்டிய நேரம் வந்து விட்டது என்று ஏபி டீ வில்லியர்ஸ்க்கு மீண்டும் சவால் விட தயாராக இருக்கிறேன். அவர் சிஎஸ்கே சட்டையை அணிந்தால் நான் ஆர்சிபி சட்டை அணிவதை நிறுத்தி விடுகிறேன். பிளே ஆஃப் சுற்று நடைபெறும் கடைசி வாரத்தில் அவர் இங்கே வர்ணனையாளராக வர உள்ளார்” என்று கூறினார்.

Advertisement