ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை கடந்த 2019 முதல் நடைபெற்று வருகிறது. அதில் முதல் சுற்றில் விராட் கோலி தலைமையில் லீக் தொடர்களில் அபாரமாக விளையாடிய இந்தியா கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இங்கிலாந்தின் சௌதம்டன் நகரில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான 2021 இறுதிப் போட்டியில் சுமாராக விளையாடிய இந்தியா பரிதாபமாக தோல்வியை சந்தித்தது.
அதைத் தொடர்ந்து மீண்டும் அசத்திய இந்தியா ரோஹித் சர்மா தலைமையில் 2023 ஃபைனலில் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஃபைனலில் மீண்டும் சுமாராக விளையாடிய இந்தியா ஆஸ்திரேலியாவிடம் தோற்றது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா டிராவிஸ் ஹெட் 163, ஸ்டீவ் ஸ்மித் 121 ரன்கள் குவித்த உதவியுடன் 169 ரன்கள் எடுத்தது.
2023 ஃபைனல் தோல்வி:
அடுத்ததாக பேட்டிங் செய்த இந்தியா சுமாராக விளையாடி 296 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன் பின் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 270-8 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இறுதியில் 444 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு ரோஹித் 43, கில் 18, புஜாரா 27 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இருப்பினும் மிடில் ஆர்டரில் விராட் கோலி 49, ரஹானே 46 ரன்கள் அடித்து வெற்றிக்கு போராடினர்.
அதனால் 4வது நாளின் முடிவில் அவுட்டாகாமல் இருந்த அவர்கள் இன்னும் போராடி வெற்றி பெற வைப்பார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் 5வது நாள் காலையிலேயே அவர்கள் அவுட்டானதால் 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில் அப்போட்டியில் 5வது நாளில் பிட்ச் பேட்டிங் செய்வதற்கு நன்றாக இருந்ததால் விராட் கோலி இந்தியாவை வெற்றி பெற வைப்பார் என்று எதிர்பார்த்ததாக ஆஸ்திரேலிய வீரர் ஸ்காட் போலாண்ட் கூறியுள்ளார்.
போராடாமலேயே தோற்ற இந்தியா:
அப்போது விராட் கோலி விக்கெட்டை எடுத்து ஆஸ்திரேலியாவை வெற்றி பெற வைத்தது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அது 5வது நாளின் துவக்கம் என்று நினைக்கிறேன். அப்போது இந்தியாவுக்கு எவ்வளவு ரன்கள் தேவை என்பது எனக்கு நினைவில்லை. ஆனால் பிட்ச் நன்றாக இருப்பது போல் நாங்கள் உணர்த்தும். அதனால் அவர்கள் தொடர்ந்து விளையாடினால் அந்த இலக்கு சேசிங் செய்யக் கூடியதாக இருந்தது”
இதையும் படிங்க: இந்திய அணியின் அடுத்த ஹார்டிக் பாண்டியா இவர்தான்.. தம்பி கலக்குறாரு – தமிழக வீரர் அஷ்வின் பாராட்டு
“இருப்பினும் அப்போது விராட் கோலியையை முன்கூட்டியே அவுட்டாக்கியது நன்றாக அமைந்தது. அது 5வது நாளில் எங்களுடைய வெற்றிக்கு நல்ல அடித்தளத்தை அமைத்தது” என்று கூறினார். இதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் புள்ளிப்பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. அதனால் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கும் இந்தியா தகுதி பெற வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.



