- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஆஸியின் பவுலிங் அட்டாக் இந்தியாவை வீழ்த்தும்.. அவரை பாக்கெட்டில் போட காத்திருக்கேன்.. ஸ்காட் போலாண்ட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா விளையாடும் 2024/25 பார்டர் – கவாஸ்கர் கோப்பை வரும் நவம்பர் மாதம் துவங்குகிறது. கடைசியாக ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற 2018/19, 2020/21 ஆகிய 2 டெஸ்ட் தொடர்களை இந்தியா வென்றது. அதனால் ஆஸ்திரேலியாவில் அடுத்தடுத்த தொடர்களை வென்ற ஒரே ஆசிய அணியாக இந்தியா வரலாற்றுச் சாதனையும் படைத்தது.

அந்த வரிசையில் இம்முறை ரோகித் சர்மா தலைமையில் இந்தியா விளையாட உள்ளது. எனவே இம்முறையும் வென்று ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா ஹாட்ரிக் வெற்றிகளை பெறுமா என்று எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ஆனால் கடந்து 2 தோல்விகளுக்கு பதிலடி கொடுத்து இம்முறை இந்தியாவை 3 – 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வீழ்த்தும் என்று ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் சமீபத்தில் கணித்தார்.

- Advertisement -

சிறந்த அட்டாக்:

அத்துடன் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக்கோப்பை ஃபைனல் போல இத்தொடர்களிலும் இந்தியாவை வீழ்த்தி பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வெல்லத் தயாராகி வருவதாக ஆஸ்திரேலிய கேப்டன் பட் கமின்ஸ் கூறியிருந்தார். அதே போல நேதன் லயன், ஜோஸ் ஹேசல்வுட் போன்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களும் இந்தியாவை வீழ்த்த காத்திருப்பதாக சமீபத்தில் நான் வெளிப்படையாக தெரிவித்தனர்.

இந்நிலையில் தங்களிடம் கிளாஸ் நிறைந்த பவுலிங் அட்டாக் இருப்பதாக ஆஸ்திரேலிய வீரர் ஸ்காட் போலண்ட் கூறியுள்ளார். எனவே இம்முறை சொந்த மண்ணில் இந்தியாவை வீழ்த்துவோம் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அத்துடன் டேவிட் வார்னரை ஆஷஸ் தொடரில் ஸ்டுவர்ட் ப்ராட் அடிக்கடி அவுட்டாக்கியதை உலகமே அறியும்.

- Advertisement -

விராட் கோலியின் விக்கெட்:

அதே போல விராட் கோலியை நீங்கள் அவுட்டாக்கி தொடர் முழுவதும் பாக்கெட்டில் வைத்திருப்பீர்களா? என்று தொகுப்பாளர் அவரிடம் கேட்டார். அதற்கு விராட் கோலியை அவுட்டாக்குவதற்கான வழியை கண்டறிவேன் என்றும் ஸ்காட் போலண்ட் தெரிவித்துள்ளார். இது பற்றி டேனியல் செர்னி எனும் ஆஸ்திரேலிய பத்திரிகையாளரின் ட்விட்டர் பக்கத்தில் போலண்ட் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க: விராட் கோலியுடன் ரசிகையாக 2 விஷயத்தை செய்ய ஆசைப்படுறேன்.. நியூஸிலாந்து வீராங்கனை பேட்டி

“எங்களிடம் உண்மையான கிளாஸ் நிறைந்த பவுலிங் அட்டாக் இருக்கிறது என்று நினைக்கிறேன். உலகின் சிறந்த வீரர்கள் எங்களுடைய அணியில் உள்ளனர். அதனால் எங்களுடைய சொந்த மண்ணில் நிலவும் சூழ்நிலைகளில் நாங்கள் உயரே குதிப்போம் என்று நினைக்கிறேன். விராட் கோலியின் விக்கெட்டை எடுப்பது நன்றாக இருக்கும். அவரை மீண்டும் அவுட்டாக்குவதற்கான வழியை நான் கண்டறிவேன் என்று நம்புகிறேன” எனக் கூறினார்.

- Advertisement -