தங்களது முதல் ஒருநாள் கோப்பையை கைப்பற்றி உலகசாதனை படைத்த அணி.!

- Advertisement -

கிரிக்கெட் தரவரிசையல் முதல் இடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணி, ஸ்காட்லான்ட் அணிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. ஒரே ஒரு ஒருநாள் போட்டி கொண்ட இந்த தொடரில் இங்கிலாந்து அணியை ஸ்காட்லாந்து அணி முதன்முறையாக வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

scotland

- Advertisement -

 

 

இங்கிலாந்து மற்றும் ஸ்காண்டலாண்ட் அணிகள் மோதிய இந்த போட்டி நேற்று (ஜூன் 10 ) எடின்பெர்க் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் பின்னர் களமிறங்கிய ஸ்காண்டலாண்ட் அணியின் பேட்டிங் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய ஸ்காண்டலாண்ட் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான மாதீவ் க்ரோஸ்(48) மற்றும் கைலி கோல்டஸ்ர்(58) அற்புதமான தொடக்கத்தை கொடுத்தனர். இவர்கள் இருவருக்கு பின் களமிறங்கிய கலும் நம்பமுடியாத ஆட்டத்தை வெளிப்படுத்தி 94 பந்துகளில் 140 ரன்களை எடுத்து அசத்தினார்.

scotland

பின்னர் இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 371 ரன்களை எடுத்து ஸ்காண்டலாண்ட் அணி. இதன் பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி 48.5 ஓவர்களில் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 365 ரன்களை எடுத்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜொனாதன் பேர்ஸ்டோ 59 பந்துகளில் 105 ரன்களை எடுத்தார். இருப்பினும் இறுதியில் வெறும் 6 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி தோல்வியடைந்தது.

Advertisement