கோலியின் இந்த செயல் தான் என்னுடைய இந்த காட்டடிக்கு காரணம் – சர்பிராஸ் கான் ஓபன் டாக்

Sarfaraz-khan-2

மும்பை அணியின் இளம் வீரரான சர்பராஸ் கான் நடப்பு ரஞ்சி டிராபியில் மும்பை அணிக்காக அபாரமாக ஆடி சதங்களாக குவித்து வருகிறார். உத்தரப்பிரதேச அணிக்கெதிரான போட்டியில் முச்சதம் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும் இமாச்சல பிரதேச அளிக்கும் இரட்டை சதம் அடித்து அசத்தினார்.

Sarfaraz khan

இப்போது மத்திய பிரதேச அணிக்கு எதிராக நடைபெற்றுவரும் ரஞ்சிப் போட்டியில் சதம் விளாசி கிட்டத்தட்ட இரட்டை சதத்தை நெருங்கி 177 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதுவும் ஒரு பெரிய இன்னிங்ஸ்தான் எனவே முச்சதம், இரட்டை சதம் மற்றும் சதம் என தொடர்ச்சியாக சிறப்பாக ஆடி வருகிறார். சர்பராஸ் கான் இந்த 177 ரன்களை அடிக்க அவர் 210 பந்துகளில் எடுத்துக்கொண்டார். மேலும் இதில் 24 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் அடித்து குறிப்பிடத்தக்கது.

ஆர்சிபி அணிக்காக கோலி தலைமையில் ஆடி வந்த சர்பராஸ் கான் ஃபிட்னஸ் இல்லை என்ற காரணத்திற்காக கழட்டி விடப்பட்ட நிலையில் இந்த ஐபிஎல்லில் அவர் பஞ்சாப் அணிக்காக ஆடுகிறார். ஆர்சிபி அணியில் இருந்து கோலி ஃபிட்னஸ் இல்லை என்பதற்காக கழட்டி விட்ட அந்த நிலைதான் எனது இந்த சிறப்பான ஆட்டத்திற்கு தூண்டுகோலாகவும், உத்வேகமாகவும் அமைந்தது என்று சர்ப்ராஸ் கான் கூறினார்.

Sarfaraz khan 1

மேலும் பிட்னெஸ்க்காக தற்போது தனி கவனம் செலுத்தி வருவதாகவும், அந்த விரக்தி தான் என்னை இவ்வாறு பேட்டிங் செய்ய தூண்டுகிறது என்றும் சர்பராஸ் கான் கூறியுள்ளார், ரஞ்சி கோப்பையில் பெரிய அளவு ரன்களை குவித்து வருவதால் இவர் இந்தியாவின் தேர்வுக் குழுவினரின் கவனத்தை ஈர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது,