தோனியிடம் இதைத்தான் கற்று கொள்ள வேண்டும்..! பாகிஸ்தான் கேப்டன் நெகிழ்ச்சி..! – விவரம் உள்ளே

dhoni
- Advertisement -

முன்னாள் இந்திய அணியின் கேப்டன் தோனி மீது ஆயிரம் விமர்சங்கங்கள் வந்தாலும், இன்றளவும் அவர் ஒரு சிறந்த கேப்டன்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். இவரின் கேப்டன் திறமையா பல கிரிக்கெட் ஜாம்பவான்கள் பாராட்டி வரும் நிலையில் பாகிஸ்தான் கேப்டன் சர்பராஸ் அகமது தோனியின் திறமை குறித்து புகழ்ந்துள்ளார்.
dhoni-sarfraz
கடந்த சில ஆண்டுகளாக தனது செயல்பாட்டில் சறுக்களை கண்ட தோனி, சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் கேப்டனாக களமிறங்கினர். இரண்டு ஆண்டுகள் தடைக்கு பிறகு களமிறங்கிய சென்னை அணி இந்த ஆண்டு கோப்பையை கைப்பற்றி வெற்றி வாகை சூடியது. இந்த தொடரில் தோனி தனது பழைய பார்ம்-ஐ மீண்டும் கொண்டு வந்தார்,

2007ம் ஆண்டில் இந்திய அணியின் கேப்டனாக தோனி ஆனதற்கு பிறகு இந்திய அணிக்கு ஒரு சிறந்த கேப்டன் கிடைத்துவிட்டார் என்ற நம்பிக்கை அனைத்து ரசிகர்கள் மனதிலும் வந்தது. பின்னர் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணிக்கு உலக கோப்பையை பெற்று தந்த பெருமையும் தோனியை தான் சாரும். தற்போது டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டுமே ஆடி வருகிறார்.

- Advertisement -

சமீபத்தில் தோனி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சர்பராஸ் அகமது “தோனி, மூன்று தரப்பு கிரிக்கெட் போட்டிகளிலும் தலைமையேற்று நடத்தியுள்ளார். இதுவரை நான் தோனியை ஒரு முறை மட்டுமே சந்தித்துள்ளேன்.2017 ஆம் ஆண்டு ஜூன் 4 ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான போட்டியில் அவரை சந்தித்தேன். ஒரு கேப்டனாகவும், வீரராகம் அவரை காணும் போது எனக்கு மிகவும் ஊக்கமளிப்பதா உள்ளது” என்று கூறியுள்ளார்.

Advertisement