ஆசிய கோப்பையை வெல்லும் அணி..! இந்திய அணியை விட நாங்கள் தான் சிறந்த அணி .! கூறியது யார் தெரியுமா.?

asia-cup-logo

ஆசிய கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடர் அடுத்த மதம் தொடங்க உள்ள நிலையில் பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், இந்திய அணி எங்களை விட சிறந்த அணிதான் என்பதில் எங்களுக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. அதே சமயம் இந்திய அணியை விட நாங்கள் இப்பொது மன ரீதியாக வலிமையில் உள்ளோம். இது எங்களுக்கு மிகப்பெரிய பலம்.

Sarfraz

இந்திய அணியின் மனநிலை என்ன என்பது இங்கிலாந்து தொடர் முடிந்த பின்பே தெரியவரும். இந்திய அணியுடன் நாங்கள் சாம்பியன்ஸ் கோப்பை இறுதி ஆட்டத்திற்கு பிறகு இப்போதுதான் மோத உள்ளோம். எனவே இத்தொடரை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளோம். மேலும் UAE நாட்டு ஆடுகளங்களில் நாங்கள் அதிக போட்டிகளை விளையாடியுள்ளதால் அதுவும் எங்களுக்கு சாதகமான விஷயம் ஆகும்.

வரும் செப்டெம்பர் 15ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் துபாய் மற்றும் அபுதாபி ஆகிய நகரங்களில் நடை பெற உள்ளன மொத்தமாக 13 ஒருநாள் போட்டிகள் நடைபெறுகின்றன. ஆசிய கோப்பை போட்டிகள் இந்தியா பாகிஸ்தான் இலங்கை வங்கதேசம் ஆப்கானிஸ்தான் மற்றும் தகுதி சுற்றில் வெற்றி பெரும் ஒரு அணி என 6 சர்வதேச அணிகள் கலந்து கொண்டு விளையாட உள்ளன.இந்த 6 அணிகள் 2 பிரிவாக பிரிந்து அவர்களுக்குள் மோதிக்கொள்வார்கள்.

asia cup

முதல் பிரிவில் இலங்கை ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய மூன்று அணிகள் இடம் பிடித்துள்ளன இரெண்டாம் பிரிவில் இந்தியா பாகிஸ்தான் மற்றும் தகுதி சுற்றில் வெல்லும் அணி ஆகிய மூன்று அணிகள் இடம்பிடித்துள்ளன. தற்போது இந்த ஆசிய கோப்பைக்கான காலஅட்டவனை வெளியாகியுள்ளது. இதில் அடுத்தடுத்து நாட்களில் இந்திய அணி இரண்டு போட்டிகளை எதிர்கொள்கிறது.