192 ரன்ஸ்.. அம்பயரிடம் புகார் செய்த மிட்சேல்.. சர்பராஸ் கானுக்கு ஆதரவாக குதித்த ரோஹித்.. நடந்தது என்ன?

Sarfaraz Khan
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அதில் இதுவரை நடைபெற்ற 2 போட்டிகளிலும் அடுத்தடுத்து தோற்ற இந்திய அணி நியூஸிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் முதல் முறையாக ஒரு தொடரில் தோற்றது. மேலும் 12 வருடங்கள் கழித்து சொந்த மண்ணில் முதல் முறையாக ஒரு தொடரில் தோற்று இந்தியா அவமானத்தையும் சந்தித்தது.

அந்த நிலையில் அத்தொடரின் மூன்றாவது போட்டி நவம்பர் ஒன்றாம் தேதி மும்பையில் துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு டேவோன் கான்வே 4 ரன்களில் ஆகாஷ் தீப் வேகத்தில் அவுட்டானார்கள். மறுபுறம் நங்கூரத்தை போட முயற்சித்த கேப்டன் டாம் லாதமை 28 ரன்களில் வாஷிங்டன் சுந்தர் போல்டாக்கினார்.

- Advertisement -

சர்பராஸ் கான் ஸ்லெட்ஜிங்:

அடுத்ததாக வந்த வில் எங் நிதானமாக விளையாடிய நிலையில் எதிர்ப்புறம் வந்த ரச்சின் ரவீந்தராவையும் 5 ரன்களில் சுந்தர் போல்டாக்கினார். அடுத்ததாக டேரில் மிட்சேல் – வில் எங் ஜோடி சேர்ந்து 4வது விக்கெட்டுக்கு 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சவால் கொடுத்தனர். அப்போது 32வது ஓவரில் இளம் இந்திய வீரர் சர்பராஸ் கான் ஷார்ட் லெக் பகுதியில் நின்று ஃபீல்டிங் செய்தார்.

மேலும் பார்ட்னர்ஷிப்பை பிரித்து விக்கெட் எடுக்க உதவிய அவர் டேரில் மிட்சேலிடம் கவனத்தை சீர்குலைப்பதற்காக பேச்சு கொடுத்தார். குறிப்பாக அவரை பேட்டிங் செய்ய விடாமல் சர்பராஸ் கான் கவனத்தை சீர்குலைப்பதற்காக ஸ்லெட்ஜிங் செய்தார். அதனால் கடுப்பான மிட்சேல் இவர் என்னை பேட்டிங் செய்யவிடாமல் பேசுகிறார் என்று நடுவர்களிடம் புகார் செய்தார்.

- Advertisement -

ஜடேஜா அசத்தல்:

அதன் காரணமாக நடுவர்கள் சர்பராஸ் கானை அழைத்து எச்சரித்தனர். அப்போது விதிமுறைகளுக்கு உட்பட்டே சர்பராஸ் கான் நடந்து கொண்டதாக இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தனது அணியில் வீரருக்கு ஆதரவாக நடுவர்களிடம் வாதிட்டார். அதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் சில நிமிடங்களுக்கு பின் மீண்டும் போட்டி நடைபெற்றது.

இதையும் படிங்க: இதுவே போதும்.. விராட் கோலி ஆர்சிபி அணியில் அந்த வாய்ப்புக்கு சரியானவர் அல்ல.. சஞ்சய் மஞ்ரேக்கர் விமர்சனம்

தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் 71 ரன்கள் குவித்து சவாலை கொடுத்த போது வில் எங்கை அவுட்டாக்கிய ரவீந்திர ஜடேஜா அடுத்து வந்த டான் பிளண்டலை டக் அவுட்டாக்கினார். அதற்கடுத்ததாக வந்த கிளன் பிலிப்ஸையும் 17 ரன்களில் ஜடேஜா போல்ட்டாக்கி இந்தியாவை முன்னிலைப்படுத்தினார். அதனால் முதல் நாள் உணவு இடைவெளியில் நியூஸிலாந்து 1926 ரன்கள் எடுத்துள்ளது.

Advertisement