நீங்க இதுக்கு சரிப்பட்டு வரமாட்டீங்க. சாரி என்று சொல்லி கோலி அணியில் இருந்து நீக்கினார் – சர்பிராஸ் கான் வேதனை

Sarfaraz
- Advertisement -

ரஞ்சி கோப்பை தொடரில் மும்பை அணியின் இளம் வீரரான சர்ப்ராஸ் கான் தற்போது சிறப்பான பார்மில் ஆடி வருகிறார். உத்தரபிரதேச அணிக்கு எதிரான கடைசி போட்டியில் முச்சதம் அடித்து அசத்தினார். தற்போது நடைபெற்று வரும் ஹிமாச்சல அணிக்கு எதிரான போட்டியில் இரட்டை சதம் அடித்து மீண்டும் முச்சதத்தை நோக்கி களத்தில் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

sarfaraz 2

- Advertisement -

அவரின் இந்த சிறப்பான பேட்டிங்கால் மும்பை அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் நல்ல நிலைமைக்கு கொண்டு சென்றுள்ளார். ஒரு கட்டத்தில் 71 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த போது களமிறங்கிய சர்பராஸ் கான் பவுண்டரிகளும், சிக்ஸருமாக அடித்து 213 பந்தில் 226 ரன்களை அடித்துள்ளார். இதனால் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் மும்பை அணி 372 ரன்கள் குவித்துள்ளது.

கடந்த போட்டியில் முச்சதம் அடித்து அசத்தியவர் தற்போது மீண்டும் ஒரு முச்சததிற்காக காத்திருக்கிறார். இந்நிலையில் 2015 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை ஆர்சிபி அணிக்காக விளையாடியது குறித்து சர்ப்ராஸ் கான் பேசியுள்ளார் : நான் ஆர்சிபி அணியில் இருந்து கழற்றி விடப்பட்டது மிகவும் மன வருத்தமாக இருக்கிறது. மேலும் என்னை அணியிலிருந்து நீக்கிய போது பிட்னஸ் இல்லாத காரணத்தினாலே உங்களை அணியிலிருந்து நீக்குகிறோம் என்று கோலி என்னிடம் கூறினார்.

sarfaraz 1

மேலும் இதனால் நீங்கள் கஷ்டப்பட வேண்டாம். நீங்கள் நிச்சயம் உங்களது பிட்னஸை மேம்படுத்திய தீர வேண்டும் என்று கோலி தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளார். மேலும் உன் திறமை மீது எனக்கு எந்த வித சந்தேகமும் இல்லை ஆனால் உன் உடல் அமைப்பை நீ மாற்றியே தீர வேண்டும் என்றும் கோலி கூறியதாக கூறியுள்ளார். அதன் பின்னர் தற்போது தான் பிட்னசில் கவனம் செலுத்தி வருவதாக கூறியது சர்ப்ராஸ் கான் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement