ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 ஒருநாள் தொடர் பிப்ரவரி 19ஆம் தேதி பாகிஸ்தானில் வாங்குகிறது. அந்தத் தொடரில் இந்தியா பாகிஸ்தான் மோதும் போட்டிக்காக ரசிகர்கள் வழக்கம் போல ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அந்த போட்டி வரும் பிப்ரவரி 23ஆம் தேதி துபாயில் இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு துவங்குகிறது.
இந்நிலையில் இந்தியா – பாகிஸ்தான் வாரியங்கள் எல்லைப் பிரச்சினை காரணமாக மோதிக்கொண்டாலும் இருநாட்டு வீரர்களிடையே நல்ல நட்பு இருப்பதாக முன்னாள் வீரர் சர்பராஸ் அஹ்மத் தெரிவித்துள்ளார். 2017 சாம்பியன்ஸ் ட்ராபியில் எம்எஸ் தோனி அவருடைய 3 மாதக் குழந்தையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அந்த நினைவுகளையும் பகிர்ந்துள்ள சர்பராஸ் கேப்டன்ஷிப் மற்றும் விக்கெட் கீப்பிங் பற்றி தோனியிடம் சில நுணுக்கங்களை கற்றுக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
தோனியின் நட்பு:
இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “எனது குழந்தையுடன் புகைப்படம் எடுத்த தருணம் தோனி அவரது குடும்பத்துடன் வந்த போது நடந்தது. அதுவே எனது மூன்று மாதப் பையனுடன் அவரைப் புகைப்படம் எடுக்க சரியான நேரம் என்று நினைத்தேன். கிரிக்கெட்டைப் பற்றியும் விக்கெட் கீப்பிங் பற்றியும் பொதுவாக நான் தோனியிடம் நீண்ட விவாதம் நடத்தினேன்”
“விக்கெட் கீப்பராகவும் பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் எப்படி உங்களது வேலையை சமநிலையுடன் செய்கிறீர்கள் என்று அவரிடம் ஆலோசனைக் கேட்டேன். அதற்கு தோனி கொடுத்த ஆலோசனைகள் எனக்கு மிகப்பெரிய உதவிகளை செய்தது. மிகவும் பணிவுமிக்க அவர் தன்னுடைய ஆலோசனைகளை கொடுத்தார். இப்போதெல்லாம் அடிக்கடி இருதரப்பு தொடர்கள் நடைபெறுவதில்லை”
நாங்க நண்பர்களே:
“இருப்பினும் இந்தியா பாகிஸ்தான் வீரர்கள் சந்திக்கும் போதெல்லாம் அதில் எப்போதுமே பரஸ்பர நட்பு இருக்கும். அதனால் போட்டி முடிந்தவுடன் யுவராஜ் சிங், விராட் கோலி, எம்.எஸ். தோனி, சோயப் மாலிக் ஆகியோர் ஒன்றாக உட்கார்ந்து பேசுவார்கள்” என்று கூறினார். அவர் கூறுவது போல விராட் கோலி, பாபர் அசாம் உள்ளிட்ட சமீப கால வீரர்கள் நட்புடனே இருக்கிறார்கள்.
இதையும் படிங்க: இந்திய தேசிய கோடியை எங்க நாட்டில் பறக்கவிடாமல் போனதுக்கு காரணம் இதுதான் – பாக் வாரியம் கொடுத்த விளக்கம்
இருப்பினும் இந்தியா – பாகிஸ்தான் வாரியங்கள் எல்லைப் பிரச்சினை காரணமாக இருதரப்பு தொடர்களில் கூட மோதாமல் இருந்து வருகின்றன. அதைத் தொடர்ந்து 2023 உலகக் கோப்பை, 2024 டி20 உலகக் கோப்பை தோல்விக்கு இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் பாகிஸ்தான் விளையாடும் உள்ளது. மறுபுறம் 2017 சாம்பியன்ஸ் டிராபிக்கு ஃபைனல் தோல்விக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாராக உள்ளது.



