மும்பை கிரிக்கெட் அணிக்காக சகோதரர்கள் சர்பராஸ் கான் – முஷீர் கான் ஒன்றாக உள்ளூரில் விளையாடி வருகிறார்கள். அந்த சூழ்நிலையில் 2025/26 விஜய் ஹசாரே கோப்பை உள்ளூர் ஒருநாள் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகின்றது. அந்தத் தொடரில் ஜெய்ப்பூரில் டிசம்பர் 31ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் கோவாவை 87 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை தோற்கடித்து அசத்தியது.
அந்த வெற்றிக்கு பேட்டிங் துறையில் ஜெய்ஸ்வால் 46, முஷீர் கான் 60, சர்பராஸ் கான் சதமடித்து 157, ஹர்டிக் டாமோர் 53 ரன்கள் அடித்து மும்பை 444 ரன்கள் குவிக்க முக்கிய பங்காற்றினார்கள். குறிப்பாக 3வது விக்கெட்டுக்கு தம்முடைய தம்பியுடன் சேர்ந்து கோவாவை வெளுத்து வாங்கிய சர்ப்ராஸ் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினார். இந்நிலையில் ஒரு உள்ளூர் போட்டியில் தாமும் முசீர் கானும் சேர்ந்து ஒன்றாக சதமடிக்க வேண்டும் என்பது கனவு என்று சர்பராஸ் தெரிவித்துள்ளார்.
தம்பியுடன் சேர்ந்து சதம்:
இப்போட்டியில் அது நிறைவேறாவிட்டாலும் வருங்காலங்களில் உண்மையாகும் என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். இது பற்றி சர்பராஸ் பேசியது பின்வருமாறு. “ஒரு போட்டியில் நாங்கள் இருவரும் சதங்கள் அடித்து ஒன்றாக பேட்டை உயர்த்த வேண்டும் என்பது கனவாகும். அதை நாங்கள் உண்மையாக செய்ய விரும்புகிறோம்”
“நாங்கள் ரஞ்சிக் கோப்பையில் சதமடிக்க நினைத்தது நடக்கவில்லை. இன்றும் முஷீர் சதமடிக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். நிறைய நேரம் இருப்பதால் அது நிச்சயம் நடக்கும். இன்றைய கனவு எளிதாக நடக்காது. அதற்கு கொஞ்சம் நேரம் எடுத்துக் கொள்ளும். அதுவும் வேடிக்கையானதாகும். நானும் என்னுடைய தம்பியும் ஒருவரை ஒருவர் நன்றாக தெரிந்து வைத்துள்ளோம்”
சர்பராஸின் கனவு:
“விளையாட்டைப் பற்றிய எங்களுடைய புரிதல் மற்றும் டெக்னிக் ஒரே மாதிரியாக இருக்கும். களத்தில் விளையாடும் போது எப்படி பவுலரை கையாளலாம் அல்லது ஆட்டத்தின் வேகத்தை கட்டுப்படுத்தலாம் என்பதைப் பற்றி நாங்கள் ஒருவரை ஒருவர் ஆலோசித்துக் கொள்வோம். முஷீர் எப்போதும் எனக்கு ஆலோசனைக் கொடுப்பார். அதற்காக நான் சில நேரங்களில் கோபப்படுவேன். ஆனால் அவரது பரிந்துரைகளை நான் எளிதாக எடுத்துக் கொள்ள மாட்டேன்”
இதையும் படிங்க: இந்த பையனுக்கு சீக்கிரம் ஒருநாள் போட்டியிலும் சேன்ஸ் தாங்க.. அசத்தப்போறான் – ரவிச்சந்திரன் அஷ்வின் கருத்து
“இந்த மைதானம் பற்றி எனக்கு நன்றாக தெரியும். இங்கு சேசிங் செய்வது எளிது கிடையாது என்பது எனக்குத் தெரியும். கோவா அணி வெற்றியை நெருங்கியும் தொட முடியவில்லை. அதனால் நிறைய ரன்கள் குவித்தால் போட்டியைக் கட்டுப்படுத்தலாம் என்பதை என்னுடைய சிந்தனையாகும். அதற்காக நீங்கள் ஆட்டத்தின் மேலே இருப்பது முக்கியம். நாங்கள் அதை செய்தோம்” என்று கூறினார்.



