ரோஹித் சர்மா மட்டுமின்றி மொத்த இந்திய அணியையும் சிரிக்க வைத்த சர்பராஸ் கான் – போட்டியில் ஏற்பட்ட சுவாரசியம்

RunOut
- Advertisement -

பெங்களூரு நகரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி துவங்கிய இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது இன்று நான்காவது நாளை எட்டியுள்ள வேளையில் போட்டி தற்போது மிகவும் சுவாரசியமான கட்டத்தை எட்டியுள்ளது என்றே கூறலாம். ஏனெனில் இந்த போட்டியின் போது முதலில் இன்னிங்சில் 46 ரன்கள் மட்டுமே எடுத்த இந்திய அணி மிகப்பெரிய சரிவை சந்தித்தது.

போட்டியின் போது கலகலப்பை ஏற்படுத்திய சர்பராஸ் கான் :

அதனைத்தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய நியூசிலாந்து அணியானது 402 ரன்கள் அடித்ததால் 356 ரன்கள் முன்னிலை பெற்றது. இதன் காரணமாக இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியடைந்து விடுமோ என்ற வருத்தமும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருந்தது.

- Advertisement -

ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் தற்போது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய அணியானது நான்காம் நாள் உணவு இடைவேளை வரை 3 விக்கெடுகளை இழந்து 344 ரன்கள் குவித்துள்ளது. இதன் காரணமாக தற்போது 12 ரன்கள் பின்னிலை பெற்றுள்ள இந்திய அணி நிச்சயம் 300 ரன்கள் வரை அடிக்கும் பட்சத்தில் வெற்றிக்கான ஒரு வாய்ப்பு இருக்கிறது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் மற்றும் சர்ஃபராஸ் கான் ஆகியோர் 132 பந்துகளில் 113 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் மைதானத்தில் இன்று சர்பராஸ் கான் செய்த செயல் ஒன்று கேப்டன் ரோகித் சர்மா மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய அணியும் சிரிப்பலையில் ஆழ்த்தியது.

- Advertisement -

அந்த வகையில் இந்த போட்டியின் போது சதத்தை கடந்து அற்புதமாக விளையாடி வந்த சர்ஃபராஸ் கான் ஒரு கட்டத்தில் பந்தை தட்டி விட்டு இரண்டு ஓட முயற்சித்தார். அவரது அழைப்பை ஏற்று மறுபுறத்தில் இருந்த ரிஷப் பண்ட்டும் ஓடி வர மைதானத்தின் பாதியை ரிஷப் பண்ட் தாண்டிவிட்டார். ஆனால் அந்த நேரத்தில் பந்து பீல்டரின் கையில் இருந்ததால் சர்ஃபராஸ் கான் பாதி பிட்ச்சின் நடுவில் இருந்து எகிறி குறித்தவாறு ஓடி வராதே.. ஓடி வராதே என்று பண்ட்டை எச்சரித்தார்.

இதையும் படிங்க : சர்பராஸ் மிரட்டல்.. காயத்தை தாண்டி இந்தியாவுக்காக விளையாடும் ரிஷப் பண்ட்.. தோனியை மிஞ்சி புதிய சாதனை

பின்னர் மீண்டும் ரிஷப் பண்ட் திரும்பி கிரீஸிற்குள் சென்று விட்டார். இதனை கண்ட இந்திய அணி முழுவதுமே அவரது இந்த அழைப்பை கண்டு சிரிப்பலையில் ஆழ்ந்தது. ஒருவேளை அந்த பந்தில் ரிஷப் பண்ட் ஆட்டமிழந்திருந்தால் போட்டி இன்னும் மோசமான நிலையினை சந்தித்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement