- Advertisement -
உலக கிரிக்கெட்

முதலில் போய் தோனி கிட்ட கேளுங்க. அப்புறம் என் கணவரிடம் கேட்கலாம் – சர்பிராஸ் அகமது மனைவி பளீர் பேட்டி

பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியில் இருந்தும் டெஸ்ட் மற்றும் டி20 அணியில் இருந்து சமீபத்தில் சர்ப்ராஸ் அகமது நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக பாபர் அசாம் டி20 போட்டிகளுக்கும், அசார் அலி டெஸ்ட் போட்டிகளுக்கும் கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் சர்பராஸ் அஹமது அணியில் இடம்பெறவில்லை அவர் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டார்.

ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கேப்டனாக இருந்த சர்ப்ராஸ் அகமது திடீரென்று கேப்டன் பதவியில் இருந்து தூக்கியதுமட்டுமில்லாமல் அணியிலிருந்து தூக்கியது அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக இருந்தது. மேலும் இதனால் விரக்தி அடைந்த சர்ப்ராஸ் அகமது விரைவில் தனது ஓய்வு முடிவை அறிவிப்பார் என்று ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியது.

- Advertisement -

இந்நிலையில் அவரது மனைவி குஷ்பாத் சர்ப்ராஸ் தற்போது பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : என் கணவர் ஏன் இப்போது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும் அதற்கு என்ன தேவை இருக்கிறது. அவருக்கு இப்போது முப்பத்திரண்டு வயது தான் ஆகிறது. தோனிக்கு என்ன வயதாகிறது தெரியுமா இப்போதும் அவர் விளையாடிக் கொண்டுதான் இருக்கிறார் அவர் என்ன ஓய்வு பெற்றுவிட்டாரா ?

அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டதால் வருத்தப்படவில்லை மீண்டும் தன்னை சரிவில் இருந்து மீட்டுக் கொள்ள அவர் நிச்சயம் தனது கடின உழைப்பை தருவார். மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எடுத்த முடிவை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். என் கணவர் இன்னும் நம்பிக்கை இழக்கவில்லை மற்றும் வேதனையும் அடையவில்லை. அவர் நிச்சயம் மீண்டும் அணிக்குள் இணைந்து விளையாடுவார் என்று அவரது மனைவி கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by