இளம் இந்திய அணியின் நடத்தை சரில்ல.. தோனி, கோலி டீம் கண்ணியமா இருந்தாங்க.. சர்பராஸ் விமர்சனம்

Sarfaraz Ahmed
- Advertisement -

துபாயில் நடைபெற்ற அண்டர்-19 ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியாவை தோற்கடித்த பாகிஸ்தான் சாம்பியன் பட்டம் வென்றது. அத்தொடரில் லீக் சுற்றில் பாகிஸ்தானை தோற்கடித்த இந்தியா ஏனைய போட்டிகளிலும் வென்று ஃபைனல் சென்றது. ஆனால் இறுதிப்போட்டியில் இந்தியாவை அடித்து நொறுக்கிய பாகிஸ்தான் 347 ரன்களை குவித்து அசத்தியது.

அதிகபட்சமாக சமீர் மின்ஹாஸ் சதமடித்து 172 (113) ரன்கள் குவித்து இந்தியாவுக்கு ஆரம்பத்திலேயே பின்னடைவைக் கொடுத்தார். அடுத்து விளையாடிய இந்தியா 26.2 ஓவரில் 156 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வியை சந்தித்தது. அதனால் 191 ரன்கள் வித்யாசத்தில் பாகிஸ்தான் வென்றதை அந்நாட்டு ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

- Advertisement -

நடத்தை சரில்ல:

முன்னதாக அப்போட்டியில் இந்தியாவுக்காக அதிரடியாக விளையாடிய வைபவ் சூர்யவன்சியை அவுட்டாக்கிய பாகிஸ்தான் பவுலர் அலி ராசா வெறித்தனமாக கொண்டாடினார். அப்போது அவர் சில வார்த்தைகளை சொன்னதால் சூரியவன்சி கோபமடைந்தார். அதனால் தம்முடைய செருப்பைக் காண்பித்த சூரியவன்சி சரியான வார்த்தைகளால் அவருக்கு பதிலடி கொடுத்து விட்டு ஃபெவிலியன் திரும்பினார்.

அதே போல இந்திய கேப்டன் ஆயுஷ் மாத்ரேவை அவுட்டாக்கிய அலி ராசா விக்கெட்டை வெறித்தனமாக கொண்டாடி சில வார்த்தைகளை சொன்னதாக தெரிகிறது. அதனால் கோபமடைந்த ஆயுஷ் மாத்ரே சில ஹிந்தி கெட்ட வார்த்தைகளை சொல்லி அவருக்கு பதிலடி கொடுத்து விட்டுச் சென்றார். அதை பெவிலியனில் இருந்த பார்த்த பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் சர்பராஸ் அஹ்மத். “நீங்கள் அறியாதவர்களுக்கு எதிராக விளையாடக்கூடாது. கண்ணியத்தின் எல்லைக்குள் விளையாட வேண்டும்” என்று தன்னுடைய வீரர்களிடம் சொன்னது வைரலானது.

- Advertisement -

சர்பராஸ் விமர்சனம்:

இந்நிலையில் தம்முடைய காலத்தில் இருந்த தோனி, விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கண்ணியமாகவும் நல்ல நடத்தை கொண்டிருந்ததாகவும் சர்பராஸ் அஹ்மத் தெரிவித்துள்ளார். ஆனால் தற்போதைய இளம் இந்திய அணியின் நடத்தை சரியில்லை என்று சர்பராஸ் அஹ்மத் விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இதற்கு முன்பு நான் இந்திய அணிக்கு எதிராக விளையாடியுள்ளேன். அப்போதைய இந்திய அணி விளையாட்டை மதித்தது”

இதையும் படிங்க: தோனி இல்லனா என் கேரியரே இருந்திருக்காது.. இந்திய அணியில் இப்படித்தான் உதவுனாரு.. மிஸ்ரா பேட்டி

“ஆனால் வெளியே அமர்ந்திருந்த போது இப்போதைய இந்திய அணியின் நடத்தை விளையாட்டுக்கு நல்லதல்ல என்பதையும், இந்திய அணியின் நடத்தை நெறிமுறை முறையற்றது என்பதையும் உணர்ந்தேன். இந்திய வீரர்கள் செய்த செய்கைகளை நீங்கள் திரையில் பார்த்தீர்கள். ஆனால் நாங்கள் வெற்றியை விளையாட்டுத்திறனுடன் கொண்டாடினோம். ஏனெனில் கிரிக்கெட்டில் எப்போதும் விளையாட்டுத்திறன் இருக்க வேண்டும். அதை செய்யாதது இந்தியாவின் சொந்த செயல்” என்று கூறினார்.

Advertisement