இவரால சேவாக் மாதிரி விளையாட முடியும். அவரை போயி டீம்ல இருந்து தூக்கிட்டிங்களே – சரன்தீப் சிங் கோவம்

Sarandeep-singh
- Advertisement -

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டதில் இருந்து இந்திய அணியின் தேர்வு குறித்து நாள்தோறும் ஒரு விமர்சனம் எழுந்து கொண்டே தான் வருகிறது. அதிலும் குறிப்பாக இந்திய அணியின் இளம் வீரரான பிரித்வி ஷாவை அணியில் சேர்க்காதது குறித்து பலரும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் நிச்சயம் இந்திய அணியில் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்த்த வேளையில் மீண்டும் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.

shaw-2

21 வயதான பிரித்வி ஷா விஜய் ஹசாரே தொடரின்போது 8 போட்டிகளில் 827 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். அதிலும் ஒரு இரட்டை சதம் அடித்து அசத்தி இருந்தார். அந்த தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 165.40 ரன்கள் ஆவரேஜ் உடன் விளையாடி தனது அசாத்தியமான பேட்டிங் திறமையை வெளிக்காட்டினார். அதுமட்டுமின்றி நடைபெற்று ஒத்தி வைக்கப்பட்டுள்ள ஐபிஎல் தொடரில் 8 போட்டிகளில் 308 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார்.

- Advertisement -

இதன் காரணமாக நிச்சயம் தான் இழந்த இடத்தை மீட்டு எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது நீக்கம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் அவரது நீக்கம் குறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு உறுப்பினர் சரண்தீப் சிங் கூறுகையில் : ப்ரித்வி ஷாவால் நிச்சயம் வீரேந்திர சேவாக் போன்று விளையாட முடியும் இந்திய அணிக்காக சேவாக் என்ன செய்தாரோ அதனை ப்ரித்வி ஷா நிச்சயம் செய்வார்.

அவருடைய துவக்க காலத்திலேயே அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது என்னை பொறுத்தவரை தவறு. அவரிடம் இன்னும் நிறைய திறமை இருக்கின்றன. எனவே அவருக்கு வாய்ப்பு வழங்கி அவரை ஊக்குவிக்க வேண்டும். ஆஸ்திரேலிய தொடரின் போது அணியில் இருந்து ட்ராப் செய்யப்பட்ட அவர் தற்போது உள்ளூர் போட்டிகளிலும் ஐபிஎல் தொடர்களும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

shaw 2

இதனால் அவரை இந்திய அணிக்குள் மீண்டும் கொண்டு வரவேண்டும் என்று சந்தீப் சிங் தனது காட்டமான கருத்தினை வெளியிட்டுள்ளார். மேலும் டெஸ்ட் இறுதிப் போட்டியில் விளையாடும் அதே அணி தான் இங்கிலாந்து தொடரில் விளையாட இருக்கும் என்பதனால் நிச்சயம் அவர் சேர்க்கப்பட்டு இருக்க வேண்டும் என்றும் சரண்தீப் சிங் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement