அடுத்த 10 வருஷத்திற்கு இந்திய அணியில் இவரை யாரும் அசைக்க கூட முடியாது – சரன்தீப் சிங் ஓபன்டாக்

- Advertisement -

கடந்த ஆஸ்திரேலியா அணிக்கெதிரான தொடர் மட்டுமின்றி இங்கிலாந்து அணிக்கெதிரான தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பண்ட் சில மாதங்களாக நன்றாக விளையாடி அனைவரது பாராட்டையும் நற்பெயரையும் பெற்றுக் கொண்டு வருகிறார். ரிஷப் பண்டை பல்வேறு கிரிக்கெட் ஜாம்பவான்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டி வரும் நிலையில் இந்திய முன்னாள் செயலாளரான சரண்தீப் சிங் அண்மையில் பண்டை பாராட்டி உள்ளார்.

pant 1

- Advertisement -

ரிஷப் பண்ட் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் முதல் சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்து தொடர் வரை மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். தனக்கு கிடைத்த வாய்ப்புகளை மிக சரியாக பயன்படுத்திக் கொண்டு தனது பேட்டிங் திறமையை நிரூபித்து வருகிறார். இதற்கு முன்னதாக அவருக்கு ஃபிட்னஸ் சம்பந்தமாக சில பிரச்சனைகள் இருந்தன. ஆனால் தீவிர உடற்பயிற்சியின் மூலமும் , பேட்டிங் பயிற்சியின் மூலமும் தற்பொழுது அவரது ஆட்டத்தில் மிகப்பெரிய மாற்றம் தெரிகிறது.

23 வயதான ரிஷப் பண்ட் ஆடுவதை பார்த்தால் 30 வயது நிறைந்த சீனியர் பேட்ஸ்மேன் ஆடுவது போல் உள்ளது. இதே ஆட்டத்தை அவர் தொடர்ந்து காட்டிக் கொண்டு வந்தால் இன்னும் பத்து வருடங்களுக்கு அவரது இடத்தை யாரும் தொடமுடியாது என்று கூறினார். ரிஷப் பண்ட் திறமையான கிரிக்கெட் வீரர் மேலும் அவரது வயது மிக குறைவு.

pant 1

எனவே இந்திய கிரிக்கெட் வாரியம் விருத்திமான் சகாவைவிட ரிஷப் பண்ட் மீது கவனம் செலுத்தும்.எனவே இனிவரும் காலங்களில் டெஸ்ட் போட்டிகளில் ரிஷப் பண்டுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என்று கூறினார்.

pant

மேலும் தற்போது நடந்து முடிந்துள்ள ஒருநாள் தொடரில் ஐயரின் காயம் காரணமாக ரிஷப் பண்ட் விளையாடினார். காயம் சரியாகி ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டு வந்த உடன் கேஎல் ராகுல் கீப்பிங் செய்வார். ரிஷப் பண்ட் அப்போது வெளியேறி கொள்வார். ஆனால் அப்போது இந்திய கிரிக்கெட் வாரியம் என்ன முடிவு செய்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று சரண்தீப் சிங் கூறி முடித்தார்.

Advertisement