இந்திய அணியில் இவர் தொடர்ந்து நீடிப்பது கஷ்டம். பவுலிங் பண்ணலனா வெளிய போய்டுவாரு – சரன்தீப் சிங் வெளிப்படை

- Advertisement -

இந்த ஆண்டு ஜூன் மாதம் இங்கிலாந்து செல்லவிருக்கும் இந்திய டெஸ்ட் அணிக்கான வீரர்களின் பட்டியலை கடந்த வாரம் வெளியிட்டது இந்திய தேர்வுக் குழு. அந்த பட்டியலில் 20 முன்னனி வீரர்கள் மற்றும் நான்கு பேக்கப் வீரர்கள் இடம்பிடித்தனர். ஆனால் இந்திய அணியின் மிக முக்கிய ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவின் பெயர் அந்த பட்டியலில் இடம்பெறவில்லை. அவரது பெயர் இடம்பெறாமல் போனது, இந்திய ரசிகர்களை மிகுந்த கோபத்திற்கு உள்ளாக்கியது. இதற்கிடையில் ஜூலை மாதம் இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடர் மற்றும் டி20 தொடர் என இரண்டு தொடர்கள் நடக்கவிருப்பதால், அதில் ஹர்திக் பாண்டியா விளையாடுவார் என்பது உறுதியானதைத் தொடர்ந்து, இந்திய கிரக்கெட் ரசிகர்கள் தங்களது கோபத்தை கைவிட்டனர்.

INDvsNZ

இதற்கிடையில் ஹர்திக் பாண்டியா, பந்து வீசவில்லையென்றால், அவரால் ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணியின் சமநிலைத் தன்மை கெட்டுவிடும் என்ற கருத்தைக் கூறி இருக்கிறார், இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழுவில் தலைமை தேர்வாளராக இருந்த சரந்தீப் சிங். ஹர்திக் பாண்டியாவை பற்றி அவர் கூறும்போது, ஹர்திக் பாண்டியாவால் பந்து வீச முடியாமல் போனதுதான், இந்திய டெஸ்ட் அணியில் அவர் இடம் பெறாமல் போனதற்கு காரணம் என்றே சொல்லலாம்.

- Advertisement -

அவர் நிச்சயமாக ஒரு நாள் போட்டிகளில் 10 ஓவர்களும், டி20 போட்டிகளில் 4 ஓவர்களும் வீசியாக வேண்டும். ஒருவேளை அவர் ஆல்ரவுண்டராக இல்லாமல் ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே அணியில் இடம்பிடித்தார் எனில், அந்த முடிவானது இந்திய அணியின் சமநிலைத் தன்மையையே பாதித்துவிடும். மேலும் இந்திய அணி இன்னொரு பந்து வீச்சாளரை ஆடும் அணியில் எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும். இதனால் மற்ற இளம் வீரர்களான சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான் ஆகியோரின் வாய்ப்பு பறிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

pandya

மேலும் பேசிய அவர், நமது அணி கடந்த ஆஸ்திரேலிய தொடர் மற்றும் இங்கிலாந்து தொடரில் ஐந்து பௌலர்களை வைத்துக்கொண்டு விளையாடவில்லை. ஹர்திக் பாண்டியா இந்த தொடர்களில் இல்லாதபோதும் அந்த இடத்தை வாஷிங்டன் சுந்தர், ஜடேஜா, அக்‌ஷர் பட்டேல் மற்றும் ஷர்துல் தாக்கூரை வைத்தே நிரப்பிக்கொண்டோம் என்று கூறியுள்ளார். காயம் காரணமாக கடந்த பல மாதங்களாக பந்து வீச முடியாமல் தவித்து வந்த பாண்டியா,கடந்த இங்கிலாந்து தொடரின்போது மீண்டும் பந்து வீசினார்.

pandya

ஆனால் அதற்கு அடுத்து நடந்த ஐபிஎல் தொடரில் அவர் ஒரு ஓவர்கூட பந்துவீசவில்லை. இதனால் அவருக்குப் பதிலாக ஷர்துல் தாக்கூரை டெஸ்ட் போட்டிகளில் ஆல்ரவுண்டராக மாற்ற உள்ளோம் என்று இந்திய அணியின் பந்து வீச்சாளரான பரத் அருண் கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்திருந்தார். ஆனால் தற்போது ஹர்திக் பாண்டியாவால் ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளிலும் குறிப்பிட்ட ஓவர்களை வீசி முடிந்தால்தான் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்ற சூழ்நிலை உருவாகியிருக்கிறது.

Advertisement