இந்த சின்ன சின்ன காரணத்துக்காக எல்லாம் கோலியை கேப்டன் பதவியில் இருந்து நீக்க முடியாது – சரன்தீப் சிங் அதிரடி

Kohli

விராட் கோலி இந்திய அணியில் ஆக சிறந்த பேட்ஸ்மேன் என்பது அனைவரும் அறிவர். மூன்று வகை பார்மெட்டிலும் பேட்டிங் அவெரேஜை 50க்கு மேல் வைத்திருக்கக் கூடிய ஒரே வீரர் விராட் கோலி ஆவார். இருப்பினும் விராட் கோலி இதுவரை எந்தவித ஐசிசி கோப்பையை மற்றும் ஐபிஎல் கோப்பையை கைப்பற்றாத காரணத்தினால் கோலியின் கேப்டன்சி குறித்து பல்வேறு வகையில் விமர்சனங்கள் எழுந்த வண்ணமே இருக்கின்றன.

kohli 1

இந்திய அணி ரசிகர்கள் விராட் கோலியை கேப்டன் பதவியில் இருந்து தூக்கி விட்டு ரோகித் சர்மாவை போடுமாறு வலியுறுத்தி வருகின்றனர். டி20 போட்டிகளில் ரோகித் சர்மாவின் வெற்றி சதவீதம் 14 புள்ளிகள் விராட் கோலியை விட அதிகமாகும். மேலும் ரோகித் சர்மா கேப்டனாக இதுவரை ஐந்து ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி இருக்கிறார்.எனவே டி20 கேப்டனாக ரோகித் சர்மாவை நியமிக்க இந்திய ரசிகர்கள் சிலர் சோசியல் மீடியாக்களில் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து சமீபத்தில் பேசிய இந்திய முன்னாள் தேர்வாளர் சரண்தீப் சிங் , விராட் கோலி மிக அற்புதமான மற்றும் மிக அபாயகரமான பேட்ஸ்மேன் ஆவார். அவரது பிட்னஸ் குறித்து யாரும் எந்தக் கேள்வியும் எழுப்ப முடியாது. மிகவும் துடிப்பான மற்றும் வெற்றிக்காக எந்த எல்லைக்கும் சொல்லக்கூடிய வீரர் ஆவார்.

அவர் ஒவ்வொரு முறை தனது அணியை சரியாக வழிநடத்தும் சென்றாலும் ஏதோ ஒரு காரணமாக அவரால் வெற்றி கோப்பையை ருசிக்க முடியவில்லை. இருந்தபோதிலும் அவர் தனது அணியை மோசமாக வழி நடத்தியது கிடையாது. அவரை இந்த சின்ன காரணங்களுக்காக கேப்டன் பதவியில் இருந்து தூக்கி விட இயலாது.

- Advertisement -

Kohli

பேட்டிங் , பீல்டிங் என இரண்டிலும் மிக சாமர்த்தியமாக ஆடி வரக்கூடிய ஒரே வீரர் விராட் கோலி. அவர் நிச்சயமாக இந்திய அணிக்கு வெற்றிக் கோப்பையை வாங்கி தருவார் அதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று சரண்தீப் சிங் கூறி முடித்தார்.