இதுமட்டும் நடக்காமல் இருந்திருந்தால் தோனி நிச்சயம் டி20 உலகக்கோப்பையில் விளையாடியிருப்பார் – சரன்தீப் சிங் பேட்டி

Dhoni
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு முடிவை திடீரென அறிவித்தார். அவரது இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி தரும் விடயமாக அமைந்தது. ஏனெனில் தோனி இன்னும் சிறிது காலம் விளையாடுவார் என்றும் கடந்த ஆண்டு நடைபெறவிருந்த டி20 உலகக் கோப்பை வரை விளையாடுவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் திடீரென்று அவர் அறிவித்த ஓய்வு கிரிக்கெட் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

Dhoni

- Advertisement -

ஆனாலும் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற தோனி ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகிறார். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் தேர்வுக் குழு உறுப்பினரான சரன்தீப் சிங் தோனியின் ஓய்வு முடிவில் உள்ள சில விடயங்கள் குறித்து தனது கருத்தைப் பகிர்ந்து கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில் : தோனி நிச்சயம் கடந்த ஆண்டு நடைபெறவிருந்த டி20 உலக கோப்பை தொடரில் விளையாடி இருப்பார்.

ஆனால் அப்போது யாரும் எதிர்பாரா வகையில் கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு அவருடைய மன நிலையை மாற்றி விட்டது. தோனி இப்போதும் மிகவும் ஃபிட்டான வீரர். அவர் ஒருபோதும் பயிற்சிக்கு விடுமுறை கொடுத்தது கிடையாது. அனைத்து நாட்களிலும் பயிற்சியை சிறப்பாக செய்வார். அதுமட்டுமின்றி காயம் இல்லாமல் அவர் இத்தனை ஆண்டுகள் விளையாடியது அவரது உடல் தகுதிக்கு சான்று.

Dhoni

இந்நிலையில் கொரோனா லாக்டவுன் ஏற்படுத்திய இடைவெளி காரணமாகவே அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறலாம் என்ற முடிவை எடுத்துவிட்டார். இல்லையெனில் அவர் நிச்சயம் டி20 உலகக் கோப்பை வரை விளையாடும் மனநிலையில்தான் இருந்தார். இப்போது உள்ள தேர்வுக்குழு உறுப்பினர்கள் கூட தோனியை டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்து விளையாட வைத்து இருப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Dhoni

தோனி ஓய்வு பெற்று ஆறு மாதங்கள் கடந்த நிலையிலும் அவர் குறித்த செய்திகள் இணையத்தில் வருவது இன்னும் குறையவில்லை. வரும் ஏப்ரல் மே மாதங்களில் இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அவர் கேப்டனாக செயல்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement