- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்திய அணி செய்த பெரிய தவறே அவரை டீம்ல சேக்காதது தான். அதான் தோத்து போச்சு – சரண்தீப் சிங் ஆவேசம்

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பையை தவறவிட்ட பின்னர் ரோகித் சர்மா தலைமையில் புதிதாக கட்டமைக்கப்பட்ட இந்திய அணியானது கடந்த ஓராண்டாகவே டி20 கிரிக்கெட்டில் மிகச்சிறப்பான ஆதிக்கத்தை செலுத்தி வந்தது. அந்த வகையில் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலக கோப்பையிலும் சூப்பர் 12 சுற்றுகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது தாங்கள் இடம்பெற்றிருந்த குழுவில் முதலிடத்தில் பிடித்து அரையறுதிக்கு தகுதி பெற்றிருந்தது.

இருந்தாலும் முக்கியமான இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக மோசமான தோல்வியை தழுவியது. இதன் காரணமாக தற்போது இந்திய அணி பெற்ற இந்த தோல்வி குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அந்த வகையில் ஏகப்பட்ட முன்னாள் வீரர்கள் இந்திய அணியில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து பேசி வரும் வேளையில் இந்திய அணி தோற்றதற்கு நிர்வாகத்தின் மிகப்பெரிய தவறு தான் காரணம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சரன்தீப் சிங் தேர்வு குழுவினை சாடியுள்ளார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறுகையில் : இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல் அவர்களுக்கு ஒரு ஆட்டத்தில் கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இது அணி நிர்வாகம் செய்த மிகப்பெரிய தவறு. ஏனெனில் ஆஸ்திரேலியா போன்ற பெரிய மைதானங்களில் அவரால் பந்தினை தூக்கி வீசி விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்க முடியும்.

அதோடு குறிப்பாக இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் அவருக்கு வாய்ப்பை அளித்திருக்க வேண்டும். ஏனென்றால் நிச்சயம் அவர் அடிலெயிடு மைதானத்தின் அளவுகளை கணித்து பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தி இருப்பார். ஆனால் அவருக்கு இறுதிவரை நீங்கள் வாய்ப்பளிக்காமல் இருந்து விட்டீர்கள்.

- Advertisement -

ஒரு நட்சத்திர விக்கெட் டேக்கரை அணியில் வைத்துக்கொண்டு ரன்களை கட்டுப்படுத்தும் சுழற்ப்பந்து வீச்சாளர்களை விளையாட வைத்தது மிகப்பெரிய தவறு என்று சரன்தீப் சிங் கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : அதேபோன்று ரிஷப் பண்ட்க்கும் சரியான முறையில் வாய்ப்பு கொடுக்காதது ஏன் என்று எனக்கு தெரியவில்லை.

இதையும் படிங்க : டி20 வேர்ல்டுகப் : மழையால் ஃபைனல் மேட்ச் ரத்தானால் கோப்பை யாருக்கு? ஐசிசி ரூல்ஸ் கூறுவது என்ன?

அடுத்த உலகக் கோப்பைக்காவது முன்கூட்டியே இந்திய அணி திட்டமிட்டப்பட்டு வடிவமைக்கப்பட வேண்டும். தற்சமயம் உள்ள வீரர்களில் ரோகித் சர்மா, விராட் கோலி, அஷ்வின், முகமது ஷமி, புவனேஸ்வர் குமார் ஆகியோர் அடுத்த உலக கோப்பை அணியில் இருக்க மாட்டார்கள் எனவே அதற்கு தகுந்தவாறு டி20 அணியை இனியாவது தயார் செய்யுங்கள் என சரன்தீப் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by