இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான அணியில் இவங்க 2 பேரையும் எடுத்திருக்கனும் – சரன்தீப் சிங் ஓபன்டாக்

Sarandeep-singh

நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி அடைந்த தோல்விக்கு பின்னர் தற்போது இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணியை எதிர்த்து விளையாட உள்ளது. ஏற்கனவே அடைந்த தோல்வி காரணமாக இந்திய அணியின் மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் அணியில் பல மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் நிபுணர்கள், பிரபலங்கள் என பலரும் இந்திய அணியில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து தங்களது ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரான சரன்தீப் சிங் இங்கிலாந்து தொடரில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டிய இரண்டு இளம் வீரர்கள் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில் : இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் நிச்சயம் துவக்க வீரரான ப்ரித்வி ஷாவின் பெயர் இடம் பெற்றிருக்க வேண்டும். ஏனெனில் அவர் ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக செயல்படவில்லை என்றாலும் கடந்த சில மாதங்களாகவே உள்ளூர் கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் என தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

அவருக்கு பதிலாக அபிமன்யு ஈஸ்வரன் அணியில் எடுக்கப்பட்டது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. அதேபோன்று பெங்களூரு அணியின் துவக்க வீரராக விளையாடி வரும் படிக்கலும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். எனவே அவர்கள் இருவருக்கும் இங்கிலாந்து தொடருக்கான அணியில் வாய்ப்பு வழங்கி இருக்க வேண்டும் என சரண்தீப் சிங் கூறியுள்ளார்.

- Advertisement -

Shaw

ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அறிமுகமான ப்ரித்வி ஷா தனது முதல் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தியுள்ளார். இந்திய மண்ணில் சிறப்பாக விளையாடும் அவர் அயல்நாட்டில் சோபிக்க தவறியதால் அவருக்கு பதிலாக தற்போது கில் இந்திய அணியின் துவக்க வீரராக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement