இவ்ளோ திறமை உள்ள ஒரு வீரரை அணியில் இருந்து நீக்க எப்படி மனசு வந்தது – சக்லைன் முஸ்டாக் பேட்டி

Mushtaq-3
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணிக்கு கடந்த 2010ஆம் ஆண்டிலிருந்து ஆடி வருபவர் ரவிசந்திரன் அஸ்வின். 2011 ஆம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பை வென்ற அணியில் இடம் பிடித்திருந்தார். ஒருநாள் மற்றும் டி20 அணியின் மிகச் சிறந்த பந்துவீச்சாளராக இருந்தவர். தற்போது டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே இந்திய அணிக்காக ஆடி வருகிறார்.

Ashwin

- Advertisement -

மேலும் இந்தியாவில் தொடர்ச்சியாக நடக்கும் அனைத்து விதமான உள்ளூர் போட்டிகளிலும் தொடர்ந்து நன்றாக ஆடி வருகிறார். அதனைத்தொடர்ந்து ஐபிஎல் தொடரிலும் மிகச் சிறப்பாக தனது பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகிறார். தோனி இந்திய அணியின் கேப்டனாக இருந்தது வரை அவருக்கு மிகச் சிறந்த பந்துவீச்சாளர் இவர்தான்.

விராட் கோலி கேப்டன் பதவிக்கு வந்தவுடன் ரவிச்சந்திரன் அஸ்வின் ஒதுக்கப்பட்டார். தற்போது டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே அவர் ஆடிவருகிறார். இந்நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற ஒரு பந்து வீச்சாளரை இந்தியா ஓரம் கட்டுவது வேதனையளிக்கிறது என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சக்லைன் முஸ்டாக் தெரிவித்துள்ளார்.

ashwin

இதுகுறித்து அவர் கூறுகையில் : எப்படி சுழற் பந்து வீசும் ஒரு வீரராக இருந்தாலும், அவரிடம் இருக்கும் தரம்தான் முக்கியம். திறமையும், போட்டியை கணிக்கும் தெளிவும் தான் மிகவும் முக்கியம். ரவிச்சந்திரன் அஸ்வின் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓரம்கட்ட படுவதை பார்த்தபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. டெஸ்ட் போட்டிகளில் 5 நாட்களில், ஒரு பேட்ஸ்மேனை எப்படி அவுட் ஆக்குவது என்று அவருக்கு தெரியும்.

- Advertisement -

இது ஒரு நாள் போட்டிகளில் விக்கெட்டுகள் எடுப்பதை விட கடினமானது. ரன்களை எந்த பந்து வீச்சாளராளும் கட்டுப்படுத்த முடியும். ஆனால் விக்கெட் எடுக்கும் வீரரால் ரன்களையும் கட்டுப்படுத்த முடியும், விக்கெட்டும் எடுக்க முடியும். அப்படிப்பட்ட ஒரு வீரர் தான் அஸ்வின். முதலில் ஹர்பஜன் சிங்கை இப்படி ஓரம் கட்டினார்கள்.

Ashwin

அடுத்து அஸ்வினை தற்போது ஓரம்கட்டுகிறார்கள். இப்படி ஒரு திறமையான வீரரை இந்திய அணி நிரவாகம் தள்ளி வைத்திருப்பது இது மன வருத்தத்தை அளிக்கிறது என்று கூறியுள்ளார் சக்லைன் முஷ்டாக்.

Advertisement