“இவர்தான் தற்போது உள்ள உலகத்தரம் வாய்ந்த ஸ்பின்னர் ” – Saqlain Mustaq கூறியது யாரை தெரியுமா.?

saqlain

இங்கிலாந்து அணியில் சுழற்பந்துவீச்சு ஆலோசகராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சகிளைன் முஸ்தாக் பணி புரிந்து வருகிறார். தற்போது நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான தொடரிலும் இவர் பந்து வீச்சு ஆலோசனைகளை வழங்கி வருகிறார். இவரின் ஆலோசனைப்படியே இங்கிலாந்து அணியில் சுழற்பந்து வீச்சாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ashwin 2

இந்நிலையில், இங்கிலாந்து அணி தற்போது இந்திய அணியுடனான 4வது டெஸ்ட் போட்டிக்கு தயாராக பயிற்சி மேற்கொண்டு வருகிறது. தற்போது அவர் அளித்த பேட்டி ஒன்றில்: இந்திய அணியை சேர்ந்த அஸ்வின் தான் இன்றைய தேதியில் உலகின் தரம் வாய்ந்த ஸ்பின்னர் என்று கூறியுள்ளார். அஸ்வின் தனது பந்துவீச்சினை ஒவ்வொரு வீரருக்கும் மாற்றி மாற்றி வீசுகிறார்.

நான்கு, ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் நான் அஷ்வினை நல்ல பந்துவீச்சாளர் என்று மட்டுமே குறிப்பிட்டேன். அதன் பிறகு அவருடைய மாற்றம் அபரிவிதமாக வளர்ச்சி அடைந்து இன்று உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளராக வளர்ந்துந்து நிற்கிறார். அவருடைய பந்துவீச்சினை அடிக்கடி மாற்றி அதை பரிசோதனை செய்து, அதில் வெற்றியும் பெறுகிறார்.

ashwin bat

மேலும், பேட்டிங்கிலும் அணிக்காக தனது பங்களிப்பை கொடுக்க தவறவில்லை என்றும் அஸ்வின் பற்றி புகழ்ந்துள்ளார். வருகிற 30ஆம் தேதி நடைபெறும் 4வது டெஸ்ட் போட்டியில் முதுகு வலி காரணமாக அஸ்வின் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழுந்த நிலையில், இங்கிலாந்து பந்துவீச்சு பயிற்சியாளர் இந்த பேட்டி கொடுத்துள்ளார்.